எந்திரன் ரஜினி போல் மாறிய சிவாங்கி.! கலாய்க்கும் ரசிகர்கள்.!

விஜய் டிவி ஒளிபரப்பாகி வந்த சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியின் மூலம் ஒட்டுமொத்த ரசிகர்களையும் கவர்ந்தவர் தான் சிவாங்கி. இவர் தற்போது தமிழ் சின்னத்திரையில் முக்கிய நட்சத்திரமாக இருப்பவர்களில் ஒருவராக வலம் வந்து கொண்டிருக்கிறார். இவரின் குரல் மிகவும் காமெடியாக இருந்த நிலையில்  அனைவரும் இவரை கிண்டல் செய்து வந்தார்கள்.

ஆனால் இவர் பாடும் பொழுது இவரின் குரல் மிகவும் அழகாக இருப்பதாக கூறி வருகிறார்கள். இப்படிப்பட்ட நிலையில்தான் இவருக்கு குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் பங்குபெற வாய்ப்பு கிடைத்தது.இந்நிகழ்ச்சியில் இவர் புகழுடன் செய்த சேட்டைகள் ரசிகர்கள் மனதை வெகுவாக கவர்ந்தது பிறகு சோசியல் மீடியாவில் இவரின் காமெடியான வீடியோக்கள் பிரபலமாக இருந்து வருகிறது.

இதனை தொடர்ந்து தற்போது இவர் குக் வித் கோமாளி சீசன் 3-யில் பங்கு பெற்று வருகிறார். இவ்வாறு பிரபலமடைந்த இவருக்கு சமீப காலங்களாக திரைப்படங்கள் எடுப்பதற்கான வாய்ப்பும் கிடைத்து வருகிறது. அந்த வகையில் சிவகார்த்திகேயன் நடித்து வரும் டான் திரைப்படம் விரைவில் வெளியாக உள்ளது. இத்திரைப்படத்தில் சிவாங்கி நடித்துள்ளார் இதனைத் தொடர்ந்து மேலும் பல திரைப்படங்களில் முக்கிய கேரக்டரில் நடித்து வருகிறார் என்று கூறப்படுகிறது.

இப்படிப்பட்ட நிலையில் தொடர்ந்து சோஷியல் மீடியாக்களில் தனது புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு மிகவும் ஆக்டிவாக இருந்து வருகிறார். அந்த வகையில் தற்பொழுது சிட்டி ரோபோ போல் இருக்கும் வீடியோவை வெளியிட்டுள்ளார். இந்த வாரம் ஒளிபரப்பாக இருக்கும் குக் வித் கோமாளி நிகழ்ச்சிக்காக இந்த புதிய வேடத்தைப் போட்டு இருப்பார் என்று கூறப்படுகிறது.  இதோ அந்த வீடியோ.

வீடியோவை பார்க்க இங்கு கிளிக் செய்யவும்.