பாபா பாஸ்கர் உடன் நடனமாடிய புகழ்.! இணையதளத்தில் வைரலாகும் வீடியோ

பிரபல விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பல ரியாலிட்டி ஷோக்கள் மூலம் புதிதாக அறிமுகமாகி சினிமாவில் பிரபலமடைந்து வருபவர்கள் ஏராளமானோர் இருக்கிறார்கள். அந்த வகையில் கலக்க போவது யாரு நிகழ்ச்சியின் மூலம் சின்னத்திரைக்கு அறிமுகமாகி தற்போது வெள்ளித்திரையிலும் ஓரளவிற்கு திரைப்படங்களில் நடிக்க வாய்ப்பு பெற்று வருபவர் தான் நடிகர் புகழ்.

இவர் கலக்கப்போவது யாரு நிகழ்ச்சிக்கு பிறகு அது இது எது நிகழ்ச்சியில் பெண் வேடத்தில் பங்குபெற்று வந்தார்.  இவரை சின்ன குழந்தைகள் கிண்டல் செய்தால் கூட அதனை சிரித்துக் கொண்டு அதன் மூலம் மற்றவர்களை சிரிக்க வைப்பதில் வல்லமை உடையவர்.

இவ்வாறு பிரபலமடைந்து இருந்தாலும் சில திரைப்படங்களில் சின்ன சின்ன கதாபாத்திரத்தில் நடித்து வந்தார்.ஆனால் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் பங்குபெற்று குழந்தை நட்சத்திரங்கள் முதல் திரைப் பிரபலங்கள் வரை உள்ள அனைவரையும் வெகுவாக கவர்ந்தார்.

இந்நிகழ்ச்சியின் மூலம் பிரபலமடைந்த இவருக்கு தொடர்ந்து ஏராளமான திரைப்படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைத்துள்ளது. தற்பொழுது லாக் டவுன் என்பதால் இவர் நடிக்கவுள்ள படங்கள் இன்னும் தொடங்காமல் இருக்கிறது எனவே விரைவில் இவர் நடித்துள்ள திரைப்படங்கள் தொடங்கும் என்று எதிர்பார்க்கலாம்.

அதோடு குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பலரும் ரசிகர்கள் மத்தியில் பிரபலமடைந்து உள்ளார்கள். அந்தவகையில் சீசன் 2 மூலம் சின்னத்திரைக்கு அறிமுகமாகி பிரபலமடைந்தவர் தான் பாபா மாஸ்டர். இவருக்கு வயதானாலும் கூட மிகவும் சுறுசுறுப்பாக இளம் வயது பையன் போலவே இருந்ததால் பலரும் இவரை பார்த்து வியந்தார்கள்.  இந்நிலையில் தற்பொழுது புகழ் மற்றும் பாபா மாஸ்டர் இருவரும் இணைந்து குத்தாட்டம் போடும் வீடியோ இணையதளத்தில் வைரலாகி வருகிறது. இதோ அந்த வீடியோ.

வீடியோவை பார்க்க இங்கு கிளிக் செய்யவும்.