விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பல நிகழ்ச்சிகளில் காமெடிக்கு பஞ்சம் இல்லாமல் இருந்து வருகிறது.அந்த வகையில் தற்பொழுது மிகவும் ட்ரெண்டிங்கா உலகம் முழுவதும் பாராட்டப் படும் நிகழ்ச்சி குக் வித் கோமாளி.
இந்நிகழ்ச்சி தற்பொழுது இரண்டாவது சீசன் ஒளிபரப்பாகி வருகிறது. இந்நிகழ்ச்சியின் மூலம் புகழ்,பாலா,அஸ்வின்,பாபா சங்கர், சிவங்கி ஆகியோர் ரசிகர்கள் மத்தியில் பிரபலமடைந்து உள்ளார்கள்.
இந்த நிகழ்ச்சியில் அனைவரை விடவும் வயதில் அதிகமானவர் பாபா ஷங்கர் தான் ஆனால் இவர் பாலா,புகழ் இவர்களை விடவே மிகவும் ஆக்டிவாக சுறுசுறு இருப்பார்.
மற்றவர்கள் கூட சமையல் செய்யும் பொழுது முகத்தில் சிறிய பதற்றம் தெரியும் ஆனால் பாபா ஷங்கர் மிகவும் ஜாலியாக எடுத்துக் கொண்டு சமையலையும் அசத்தலாக செய்வார்.
இது ஒரு புறம் இருந்தாலும் இவர் ஒரு டான்ஸ் மாஸ்டர் ஆவார். அந்த வகையில் தற்போது தெலுங்கில் ஒரு நிகழ்ச்சியில் நடனம் நடுவராக இருந்து வருகிறார். இந்நிகழ்ச்சியில் பிரியா மணியும் இவருடன் பணிபுரிந்து வருகிறார்.
இந்நிலையில் நிகழ்ச்சியின் போது பாவா சங்கர் மற்றும் பிரியாமணி இருவரும் ரொமான்ஸ் செய்யும் நடனம் வீடியோ ஒன்று இன்ஸ்டாகிராமில் வெளியாகி உள்ளது. இந்த வீடியோவை பார்த்த ரசிகர்கள் வேற லெவல் தலைவா என்று கமெண்ட் செய்து வருகிறார்கள்.இதோ அந்த வீடியோ.
வீடியோவை பார்க்க இங்கு கிளிக் செய்யவும்.