பிரபல விஜய் டிவியில் பல ரியாலிட்டி ஷோக்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. அந்த வகையில் சமீபத்தில் மிகவும் ட்ரெண்டிங்கான நிகழ்ச்சியாக ஒட்டுமொத்த தமிழ் ரசிகர்களையும் வெகுவாக கவர்ந்துள்ள ஷோ குக் வித் கோமாளி.
இந்நிகழ்ச்சி சமையல் நிகழ்ச்சியாக இருந்தாலும் ஆட்டம், பாட்டம் கொண்டாட்டம் என்று ரசிகர்களை என்டர்டைன்மென்ட் செய்யும் வகையில் பல விஷயங்களை செய்து வருவதால் ஒட்டுமொத்த ரசிகர்களும் இந்த நிகழ்ச்சிக்கு பேர் ஆதரவு கொடுத்து வருகிறார்கள்.
அந்த வகையில் முதல் சீசனை விடவும் இரண்டாவது சீசன் தான் ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வெற்றியைப் பெற்றது. பிக்பாஸ் நிகழ்ச்சி எந்த அளவிற்கு பிரபலம் அடைந்ததோ அதே அளவிற்கு குக் வித் கோமாளி நிகழ்ச்சியும் பிரபலமடைந்துள்ளது.
அதுமட்டுமல்லாமல் இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்ட அஸ்வின், பாலா,புகழ், சிவாங்கி, தர்ஷா,பவித்ரா உள்ளிட்ட பலருக்கும் திரைப்படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைத்துள்ளது. இந்நிகழ்ச்சியின் மூலம் ஒட்டுமொத்த பெண் ரசிகர்கள் மனதையும் வெகுவாக கவர்ந்தவர் அஸ்வின்.
இவர் இதற்கு முன்பு துரு விக்ரம் நடிப்பில் வெளிவந்த ஆதித்ய வர்மா திரை படத்தில் விக்ரமிற்கு அண்ணனாக நடித்திருந்தார். இதை தொடர்ந்து இன்னும் சில படங்களிலும் ஹீரோவாக நடித்துள்ளார். ஆனால் எந்த திரைப்படங்களும் இவருக்கு சொல்லும் அளவிற்கு வெற்றியை தரவில்லை.
பிறகு குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கலந்து கொண்டு தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை உருவாக்கி பிரபலம் அடைந்துள்ளார்.அந்த வகையில் வரிசையாக இவருக்கு திரைப்படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைத்து வருகிறது. இந்நிலையில் தற்போது உதயநிதி ஸ்டாலினின் மனைவி கிருத்திகா ஸ்டாலின்அஸ்வினை வைத்து ஒரு திரைப்படம் இயக்க உள்ளார்.
கிருத்திகா ஸ்டாலின் வணக்கம் சென்னை, காளி இரண்டு திரைப்படங்களையும் இயக்கியிருந்தார். இந்த இரண்டு திரைப்படங்களும் விமர்சன ரீதியாக நல்ல வரவேற்ப்பை பெற்றிருந்தது. ஆனால் வணக்கம் சென்னை திரைப்படம் நான் வசூல் ரீதியாக நல்ல வரவேற்ப்பை பெற்றது.