பிரபல விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பல நிகழ்ச்சிகள் சினிமாவில் பிரபலம் அடைய முடியாமலும், பிரபலமடைந்தும் சரியான அங்கீகாரம் கிடைக்காமல் தவித்து வரும் பலருக்கும் ஒரு நல்ல வாய்ப்பாக அமைகிறது. அந்த வகையில் தொடர்ந்து டிஆர்பி-யில் முன்னணி வைக்க வேண்டும் என்பதற்காக விஜய் டிவி ரசிகர்கள் விரும்பும் வகையில் பல ரியாலிட்டி ஷோகளை ஒளிபரப்பி வருகிறார்கள்.
அந்த வகையில் காமெடியை மையமாக வைத்து அறிமுகமான நிகழ்ச்சி தான் குக் வித் கோமாளி. இந்நிகழ்ச்சி சமையல் நிகழ்ச்சியாக இருந்தாலும் ஆட்டம், பாட்டம், கொண்டாட்டம் என்று இருந்ததால் ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்றது. இதன் காரணமாக முதல் சீசனை தொடர்ந்து இரண்டாவது சீசனும் அறிமுகமானது.
முதல் சீசனை விட இரண்டாவது சீசன் மிகவும் சிறப்பாக அமைந்ததால் இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பிரபலமடைந்த பலருக்கும் திரைப்படங்களிலும் நடிக்க வாய்ப்பு கிடைத்துள்ளது. அந்த வகையில் கோமாளிகளாக பணியாற்றிவந்த புகழ், பாலா, சிவாங்கி, மணிமேகலை உள்ளிட்ட இன்னும் பலரும் திரைப்படங்களில் நடிக்க கமிட்டாகி உள்ளார்கள்.
இவர்களை தொடர்ந்து குக்குகளாக பங்குபெற்ற அஸ்வின், பவித்ரா, தர்ஷா குப்தா ஆகியோர்களும் திரைப்படங்களில் நடிப்பதற்காக அடுத்தடுத்து கமிட்டாகி வருகிறார்கள். இவ்வாறு வாய்ப்பு குவியும் வகையில் இந்நிகழ்ச்சியின் மூலம் ஒட்டுமொத்த பெண்கள் மனதையும் வெகுவாக கவர்ந்தவர் தான் அஸ்வின்.
இவர் வெள்ளித்திரையிலும் சில திரைப்படங்களில் நடித்துள்ளார் ஆனால் சொல்லும் அளவிற்கு பிரபலத்தை தராத காரணத்தினால் சின்னத்திரையில் ஒளிபரப்பாகி வந்த சில சீரியல்களில் நடிக்க ஆரம்பித்தார். ஆனால் அதுவும் இவருக்கு பெரிதாக பிரபலத்தை தரவில்லை இப்படிப்பட்ட நிலையில்தான் இவருக்கு குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் பங்குபெற வாய்ப்பு கிடைத்தது.
இந்நிகழ்ச்சியின் மூலம் ஒட்டுமொத்த ரசிகர்களையும் வெகுவாக கவர்ந்த இவர் தொடர்ந்து திரைப்படங்களில் நடிப்பதற்காக கமிட்டாகி வருகிறார். அந்த வகையில் தற்போது புதுமுக இயக்குனர் ஹரிஹரன் இயக்கும் படத்தில் அஸ்வினும் மற்றும் தனது காமெடியால் ஒட்டுமொத்த ரசிகர்களையும் வெகுவாக கவர்ந்த காமெடி கிங் புகழ் காமெடி நடிகராக நடிக்க உள்ளார்.
இத்திரைப்படத்திற்கு என்ன சொல்லப் போகிறாய் என்ற டைட்டிலை நடிகர் ஆர்யா வெளியிட்டுள்ளார். இப்படிப்பட்ட நிலையில் அஜித்தின் ரசிகர்கள் கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் திரைப்படத்தில் என்ன சொல்லப் போகிறாய் என்ற பாடல் வரி அஸ்வின் திரைப்படத்தின் டைட்டிலாக அமைந்துள்ளது என்று கூறி வருகிறார்கள்.