தமிழ் சினிமா உலகில் இயக்குனராகவும் நடிகராகவும் தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டவர் கே.எஸ். ரவிக்குமார். இவர் சினிமா உலகில் பெரிதும் கமர்சியல் படங்களை தான் இயக்கி உள்ளார் அந்த படங்கள் ஆரம்பத்திலேயே வெற்றியை ருசித்தது. ஒரு கட்டத்தில் தமிழ் சினிமா உலகில் உச்ச நட்சத்திரமாக இருக்கும் ரஜினி, கமல், விஜய், அஜித் போன்றவர்களை வைத்து தொடர்ந்து சிறப்பான பல படங்களை இயக்கியவர்.
இவர் படங்களை இயக்குவதையும் தாண்டி அண்மைகாலமாக படங்களை தயாரித்தும் வெற்றி கண்டு வருகிறார். தமிழ் சினிமா உலகில் இப்பொழுது இயக்குனராகவும், நடிகராகவும், தயாரிப்பாளராகவும் வருவதால் தவிர்க்க முடியாத ஒரு நபராக வலம் வருகிறார். இப்படி இருக்கின்ற நிலையில் அண்மையில் நிகழ்ச்சி ஒன்றில் தெனாலி படம் குறித்து சில அனுபவங்களை பகிர்ந்து உள்ளார் அதில் அவர் சொன்னது :
ரஜினி மற்றும் கமல் வைத்து வியாபாரத்தில் போட்டி நடந்தாலும் அவர்கள் இருவரும் இன்னும் நல்ல நண்பர்களாகவே உள்ளனர். ரஜினியின் படையப்பா ரிலீஸ் கழித்து அவரது அலுவலகத்திற்கு சென்றேன் அப்போது கமல் படத்தை தயாரிக்கும் வாய்ப்பு கிடைத்தது இதனை அறிந்த ரஜினி உடனே கமலுக்கு அட்வான்ஸ் கொடுங்கள் என கூறினார். கொடுத்து கமல் படத்தை தயாரிக்க ஒப்பந்தம் போட்டுக் கொண்டேன்.
ஆனால் கமலோ ஹே ராம் பட ஷூட்டிங்கில் பிஸியாக இருந்தார் ஒரு கட்டத்தில் ஷூட்டிங் தள்ளி போய்க்கொண்டே இருந்தது இதனை அறிந்த ரஜினி அப்செட் ஆகிவிட்டாராம். நாம் சொல்லி அட்வான்ஸ் கொடுத்த மனுஷன் இப்படி காத்துக் கிடக்கிறார் என புலம்ப ஆரம்பித்து விட்டார். சிறு இடைவேளைக்கு பிறகு படத்தின் ஷூட்டிங் தயாரானது அந்த படம் தான் தெனாலி. படத்தை முதலில் தயாரிக்க போனேன். கடைசியில் ஒரு வழியாக இந்த படத்தை நானே இயக்கினேன்.
ரஜினியும் கமலும் எப்பொழுதுமே நல்ல நண்பர்கள் சொல்லப்போனால் ரஜினிக்காக கமல் விட்டுக்கொடுப்பது கமலுக்கு ரஜினி விட்டுக்கொடுப்பது அப்போது இருந்தது நான் கூறினார். எடுத்துக்காட்டு இது.. கமலுக்கு அட்வான்ஸ் கொடுக்க ரஜினி கூறும் அளவிற்கு இருவரும் நல்ல நட்பு இருந்து வந்துள்ளது.