இலங்கை செய்தி வாசிப்பாளராக பிரபலமடைந்தவர் நடிகை லாஸ்லியா இவர் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்டு வந்த பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன் மூலம் தமிழ் ரசிகர்களிடையே மிகவும் பிரபலம் அடைந்தார் இந்த நிகழ்ச்சி மூலம் இவருக்கு மிகப்பெரிய ரசிகர் பட்டாளம் உருவானது அந்த ரசிகர்கள் ஆர்மியை தொடங்கினார்கள்.
பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் இவருக்கு பட வாய்ப்பு கிடைத்தது அந்த வகையில் கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் அவர்களுடன் இணைந்து பிரண்ட்ஷிப் என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார் இந்த திரைப்படத்தில் லாஸ்லியா கதாநாயகியாக நடித்திருந்தார். திரைப்படத்தை தொடர்ந்து அடுத்ததாக தர்ஷன் அவர்களுடன் இணைந்து கூகுள் குட்டப்பா என்ற திரைப்படத்திலும் நடித்திருந்தார்.
இந்த திரைப்படம் மலையாளத்தில் வெளியாகிய ஆண்ட்ராய்டு குஞ்சப்பன் என்ற திரைப் படத்தின் அதிகாரப்பூர்வ ரீமேக். இந்த திரைப்படம் சமீபத்தில் திரைக்கு வந்து ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றது ரஜினி விஜய் அஜீத் ஆகியோர்களை வைத்து பல திரைப்படங்களை இயக்கிய கேஎஸ் ரவிக்குமார் அவர்களும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.
கேஎஸ் ரவிக்குமார் படத்தின் புரமோஷனுக்காக பேட்டி ஒன்றை கொடுத்தார் அந்த பேட்டியில் லாஸ்லியாவை கலாய்த்து தள்ளியுள்ளார் அதாவது கே எஸ் ரவிக்குமார் அவர்கள் லாஸ்லியாவை பார்த்து நீயும் கொஞ்சம் புசுபுசுவென்று மாறிடு அப்பதான் தமிழ்சினிமாவுக்கு பிடிக்கும் ஒல்லியா மாறிவிட்டன அப்படியே ஹிந்தி பக்கம் போய்விடு என ஜாலியாக லாஸ்லியாவை வம்புக்கு இழுத்துள்ளார்.