1990ஆம் ஆண்டு வெளிவந்த புரியாத புதிர் என்ற திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர்தான் இயக்குனர் கே எஸ் ரவிக்குமார். இவர் இதற்கு முன்பு விக்ரமனிடம் உதவி இயக்குனராக அறிமுகமானார் பிறகு தொடர்ந்து சேரன் பாண்டியன், புத்தம் புது பயணம், ஊர் மரியாதை, பொண்டாட்டி ராஜ்ஜியம்,சூரியன் சந்திரன் போன்ற ஏராளமான வெற்றி திரைப்படங்களை இயக்கினார் இவ்வாறு இவர் இயக்கத்தில் வெளிவரும் அனைத்து திரைப்படங்களுக்கும் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பு கிடைத்தது.
அந்த வகையில் 1994ஆம் ஆண்டு இவருடைய இயக்கத்தை வெளிவந்த நாட்டாமை திரைப்படம் தற்பொழுது வரையிலும் ஏராளமான மக்களை கவர்ந்துள்ளது இந்த திரைப்படத்தின் மூலம் சிறந்த திரைப்படத்திற்கான தமிழ்நாடு மாநில விருது சிறந்த இயக்குனருக்கான தமிழக அரசு திரைப்பட விருது போன்றவற்றை பெற்றார். அந்த வகையில் தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகர்களாக வளம் வந்து கொண்டிருக்கும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், நடிகர் கமலஹாசன், அஜித் போன்ற ஏராளமான முன்னணி நடிகர்களை வைத்து பல படங்களை இயக்கியுள்ளார்.
மேலும் சரத்குமாரை மட்டும் வைத்து சுமார் 12 திரைப்படங்கள் இயக்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது இவரை தொடர்ந்து ரஜினிகாந்தை வைத்து முத்து, படையப்பா போன்ற திரைப்படங்களை இயக்கி உள்ளார்.இவ்வாறு சிறந்த படங்களை கொடுத்து வசூலை வாரி குவித்து வந்த நிலையில் படையப்பா திரைப்படத்திற்காகவும் சிறந்த திரைப்படத்திற்கான தமிழ்நாடு மாநில அரசின் விருதை பெற்றார். இவ்வாறு தொடர்ந்து வசூல் ரீதியாகவு,ம் விமர்சன ரீதியாகவும் வெற்றி திரைப்படங்களை இயக்கி வந்த கே எஸ் ரவிக்குமார் கடைசியாக ரஜினியை வைத்து லிங்கா திரைப்படத்தினை இயக்கியிருந்தார்.
இத்திரைப்படம் அதிக பொருட் செலவில் மிகவும் பிரம்மாண்டமாக உருவாகி இருந்தது மேலும் அனுஷ்கா மற்றும் சோனாக்ஷி சின்ஹா போன்ற நடிகைகள் நடித்திருந்தார்கள் இவர்களை தொடர்ந்து ரஜினி இரட்டை வேடத்தில் நடித்த இந்த திரைப்படம் மிகப்பெரிய தோல்வினை பெற்றது. இதன் காரணமாக சமீப காலங்களாக இவர் தெலுங்கு திரைப்படங்களை இயக்கி வருகிறார் மேலும் குணசத்திர வேடங்களில் நடித்த வருகிறார்.
இந்நிலையில் இயக்குனர் கே எஸ் ரவிக்குமார் தயாரித்து அவர் நடித்திருந்த திரைப்படம் தான் கூகுள் கூட்டப்பன் திரைப்படம் சில மாதங்களுக்கு முன்பு வெளியாகி இருந்தது இதில் பிக்பாஸ் லாஸ்லியா,தர்ஷன் உள்ளிட்டவர்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்கள். இந்தத் திரைப்படமும் எதிர்பாராத அளவிற்கு வெற்றி பெறாத காரணத்தினால் கே எஸ் ரவிக்குமார் மனக்கஷ்டத்திற்கு ஆளாகியுள்ளார் குறைவான பட்ஜெட்டில் நல்ல கதையை எடுத்தால் கூட ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைக்கும் எதிர்பார்க்கப்பட்டுள்ள நிலையில் இது படும் தோல்வியடைந்ததால் வருத்தத்தில் இருப்பதாக தன்னுடைய நெருங்கிய வட்டாரங்களிடம் கூறி வருவதாக கூறப்படுகிறது.