KS Ravikumar: இயக்குனர் கே.எஸ் ரவிக்குமார் படையப்பா படத்தில் இரண்டாவது பாகத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கிறாரா என்பது குறித்து விளக்கம் அளித்திருக்கும் தகவல் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. இயக்குனராகவும், நடிகராகவும் தமிழ் சினிமாவில் கலக்கி வருபவர் தான் கே.எஸ் ரவிக்குமார்.
இவருடைய திரைப்படங்கள் அனைத்திற்கும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது அந்த வகையில் பொதுவாக இவர் 90கிட்ஸ்களின் ஃபேவரட் நடிகராக இருந்து வருகிறார். இவர் இயக்கம் திரைப்படங்களில் இவரே நடிப்பதும் உண்டு. அந்த வகையில் கே l.எஸ் ரவிக்குமார் ரஜினி, கமல், அஜித், விஜய் என பல முன்னணி நடிகரின் திரைப்படங்களை இயக்குவதோடு மட்டுமல்லாமல் அவர்களுடன் இணைந்து நடித்திருக்கிறார்.
இவ்வாறு வெள்ளித்திரையில் கலக்கி வரும் இவர் சின்னத்திரையிலும் பணியாற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. அதாவது, விஜய் டிவியில் ஒளிபரப்பாக இருக்கும் ‘அடுத்த கதாநாயகி யார்’ என்ற நிகழ்ச்சியை தொகுத்து வழங்க இருக்கிறார்.
இப்படிப்பட்ட நிலையில் படையப்பா படத்தில் இரண்டாவது பாகம் குறித்து சமீபத்தில் விளக்கம் அளித்துள்ளார். அதாவது, கே.எஸ் ரவிக்குமார் இயக்கத்தில் 1999ஆம் ஆண்டு வெளியாகி மிகப்பெரிய ஹிட் அடித்த திரைப்படம் தான் படையப்பா. இந்த படத்தில் சிவாஜி கணேசன், ரஜினிகாந்த், சௌந்தர்யா, ரம்யா கிருஷ்ணன், நாசர், மணிவண்ணன், அப்பாஸ் என பலரும் இணைந்து நடித்திருந்தார்கள்.
இந்த படம் வெளியாகி வசூல் ரீதியாக மிகப்பெரிய சாதனையை படைத்தது. இப்படிப்பட்ட நிலையில் இந்தப் படத்தின் இரண்டாவது பாகத்திற்காக ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்பில் காத்து வருகின்றனர். அந்த வகையில் படையப்பா 2வில் சிவகார்த்திகேயன் தான் ஹீரோவாக நடிக்க இருப்பதாக சில மாதங்களுக்கு முன்பு தகவல் வைரலானது. எனவே இது குறித்து கே.எஸ் ரவிக்குமாரிடம் பத்திரிக்கையாளர் ஒருவர் சிவகார்த்திகேயன் உங்களிடம் படையப்பா 2 நடிப்பது குறித்து கேட்டு உள்ளாரா என கேட்கிறார்கள்.
அதற்கு ரவிக்குமார் அப்படியெல்லாம் இல்லை ஒரு பேட்டியில் அது சும்மா சொன்னது அவ்வளவுதான் எனக் கூற இந்த படத்தை சிவகார்த்திகேயனை வைத்து எடுப்பீர்களா என கேட்க அதற்கு ரவிக்குமார் சான்ஸ் வந்தா கண்டிப்பா எல்லாத்தையும் செய்வோம் நல்ல நேரம் வரணும் அனைத்தும் அமைய வேண்டும் என்று கூறியுள்ளார்.