மீண்டும் ஹீரோயினாக கால் தடம் பதிக்கும் கோவைசரளா..! என்னாமா கேரக்டர் ஜூஸ் பண்ணியிருக்காங்க..!

kovai-sarala
kovai-sarala

தமிழ் சினிமாவில் ஆச்சி மனோரமா இடத்தை நிவர்த்தி செய்த ஒரு நடிகை என்றால் அது கோவை சரளா தான் இவர் தமிழ் சினிமாவின் மிகச்சிறந்த காமெடி  நடிகையாகவும் குணச்சித்திர வேடத்திலும் நடித்து புகழ் பெற்றவர்.

இவ்வாறு பிரபலமான நமது நடிகை நடிப்பு ரசிகர்களால் பெருமளவு பாராட்டப்பட்டது மட்டுமில்லாமல் நமது நடிகை செந்தில் கவுண்டமணி வடிவேலு விவேக் என அனைத்து நடிகர்களுடனும் காமெடியில் இணைந்து நடித்துள்ளார்.

பொதுவாக கோவை சரளா நடிப்பிற்கு எந்த ஒரு காமெடி நடிகையும் இதுவரை ஈடுகொடுக்க முடியவில்லை. இந்நிலையில் நமது நடிகை சமீபத்தில் ஒரு திரைப்படத்தில் கதாநாயகியாக நடிக்க உள்ளார் இந்த திரைப்படத்தில் அவர் 65 வயது பாட்டி கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

இவ்வாறு இந்த திரைப்படத்தில் நடிகை கோவை சரளா தன்னுடைய பேத்திக்கு ஏற்படும் பல்வேறு அநீதியை தட்டிக் கேட்கும் கதாபாத்திரத்தில் இவர் மிக சிறப்பாக நடிக்க உள்ளார்.

இவர் ஏற்கனவே கமல்ஹாசன் நடிப்பில் வெளியான சதிலீலாவதி என்ற திரைப்படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்துள்ளார் என்பது நம் அனைவருக்குமே தெரிந்த விஷயம் தான் அந்த வகையில் இந்த திரைப்படத்தில் இருவறும் சேர்ந்து செய்யும் கலாட்டா இன்றும் கண்களிலே இருக்கிறது.

இவ்வாறு பிரபலமான நமது நடிகை பல்வேறு முன்னணி நடிகர்களின் திரைப்படத்தில் நடித்தது மட்டுமில்லாமல் தற்போது ஜிவி பிரகாஷ் நடிக்கும் ஆயிரம் ஜென்மங்கள் என்ற திரைப்படத்தில் நடிபது மட்டுமின்றி சரவணா ஸ்டோர் ஓனர் நடிக்கும் மற்றொரு திரைப்படத்திலும் நடித்து வருகிறார்.