நகைச்சுவை செய்வது என்பது ஒரு மிகப்பெரிய விஷயம் அந்த வகையில் ஒரு மனிதன் துன்பத்தில் இருக்கும் பொழுது அவரை சந்தோஷப்படுத்தும் ஒரு வித்தைதான் நகைச்சுவை.இவ்வாறு இந்த வித்தையை பயன்படுத்தி இன்று சினிமாவில் பிரபல நடிகர்களாக வலம் வருபவர்கள் ஏராளம்.
அதிலும் இப்படிப்பட்ட திறமையை ஒரு பெண் பெற்றுள்ளார் என்றால் அது மிகப்பெரிய அதிசயம்தான். அந்த வகையில் தமிழ் சினிமாவில் ஆச்சி மனோரமாவிற்கு பிறகாக நகைச்சுவை செய்து ரசிகர்களை கவர்ந்தவர் தான் கோவைசரலா. இவருடைய காமெடிக்கு மயங்காத ரசிகர்களே கிடையாது.
இவர பிரபலமான நமது நடிகை திரையுலகில் கதாநாயகியாக நடிப்பதை விட காமெடி கதாபாத்திரத்திலும் முக்கியத்துவம் உள்ள கதாபாத்திரத்திலும் நடித்து இதுவரை 750 திரைப்படத்திற்கு மேலாக தன்னுடைய திறமையை வெளிக்காட்டி உள்ளார்.
நடிகை கோவை சரளா திரைப்படத்தில் நடிப்பது மட்டும் இல்லாமல் திரைப்படத்தில் பாடல்கள் பாடுவது மற்றும் திரைப்படத்தை தயாரிப்பது போன்ற செயல்களிலும் ஈடுபட்டுள்ளார். அந்த வகையில் இவர் சிறந்த நகைச்சுவை நடிகருக்கான தமிழ்நாடு மாநிலத் திரைப்பட விருதையும் பெற்றுள்ளார்.
இதை தொடர்ந்து கடந்த 2001ம் ஆண்டு பூவெல்லாம் உன் வாசம் என்ற திரைப்படத்திற்கு விருது வாங்கியது மட்டுமில்லாமல் சிறந்த பெண் நகைச்சுவை நடிகைக்கான நந்தி விருதையும் பெற்றுள்ளார். இது போதாதென்று தற்போது பிரபல தனியார் தொலைக்காட்சிகளில் தொகுப்பாளினியாக வலம் வரும் கோவை சரளா என்றும் ரசிகர்களின் மனதில் நீங்காத இடம் பிடித்து விட்டார்.
மேலும் திரைத் துறையில் இருக்கும் ஆர்வத்தின் காரணமாக இன்றும் கோவை சரளா திருமணம் செய்து கொள்ளாமலே இருந்துவருகிறார் தற்போது 60 வயது இவருக்கு ஆனாலும் சரி இன்றும் சில திரைப்படங்களில் முகம் காட்டிக் கொண்டுதான் வருகிறார்.
அந்த வகையில் கோவை சரளா தான் இளம் வயதில் இருக்கும் பொழுது ஒரு சில திரைப்படங்களில் கதாநாயகியாக நடித்துள்ளார் அப்பொழுது இவர் நீச்சல் உடை அணிந்து கொண்டு நடித்துள்ள சில புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.