லியோ படத்திற்கு பிறகு லோகேஷ் கனகராஜ் சூப்பர் ஸ்டாரை வைத்து கூலி படத்தை இயக்கி வருகிறார். சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இப்படத்தில் நாகார்ஜுனா, சத்யராஜ், ஸ்ருதிஹாசன், உபேந்திரா என பல பிரபலங்கள் நடிக்கின்றனர்.
இதன் அதிகாரப்பூர்வமான அறிவிப்பு போஸ்டருடன் சமீபத்தில் வெளியானது. அதில் நாகார்ஜுனா சைமன் என்ற கேரக்டரில் நடிக்கிறார். அவருடைய போஸ்டரே வித்தியாசமாகவும் எதிர்பார்ப்பை தூண்டுவதாகவும் இருந்தது.
அதைத்தொடர்ந்து அவர்தான் ரஜினிக்கு வில்லன் எனவும் சொல்லப்படுகிறது. அப்படி என்றால் நிச்சயம் பவர்ஃபுல்லான கதாபாத்திரமாக தான் இருக்கும். அதுவும் இப்படம் பான் இந்தியா லெவலில் சம்பவம் செய்ய தயாராகி வருகிறது.
அதனாலேயே ஒவ்வொரு இண்டஸ்ட்ரியில் இருந்தும் முக்கிய நடிகர்களை லோகேஷ் தேர்ந்தெடுத்துள்ளார். அதன்படி தெலுங்கு ரசிகர்களை மொத்தமாக கவர் செய்வதற்காகவே நாகார்ஜுனாவை கமிட் செய்து இருக்கின்றனர்.
முன்னதாக சிரஞ்சீவி, பாலையா ஆகியோரிடம் பேச்சுவார்த்தை நடந்ததாக கூறப்படுகிறது. ஆனால் கால்ஷீட் சம்பளம் ஆகியவற்றை பொறுத்து நாகர்ஜுனா இப்படத்தில் நடிக்க சம்மதித்திருக்கிறார். அந்த வகையில் இப்படத்தில் நடிப்பதற்காக அவருக்கு 25 கோடிகள் சம்பளம் கொடுக்கப்பட்டுள்ளது.
சன் பிக்சர்ஸ் இத்தனை கோடிகளை வாரி இறைக்கிறது என்றால் நிச்சயம் அவருக்கான முக்கியத்துவம் அதிகமாக தான் இருக்கும். ஆக மொத்தம் தமிழில் சில படங்கள் நடித்திருந்தாலும் சூப்பர் ஸ்டாருக்கு வில்லனாக ஒரு சம்பவத்திற்கு தயாராகிவிட்டார் கிங் நாகார்ஜுனா.