தமிழ் சினிமாவில் வில்லன் மற்றும் குணசித்திர வேரங்களில் நடித்து புகழ் பெற்றவர் நடிகர் கூல் சுரேஷ். தற்போது சினிமாவில் சூரி, யோகி பாபு, ரோபோ சங்கர், போன்ற காமெடி நடிகர்கள் அதிகம் வருகையின் காரணமாக இவரைப் போன்று பல காமெடி நடிகர்கள் சினிமாவை விட்டு அடையாளம் தெரியாத நபராக மாறிவிடுகிறார்கள் அப்படி அடையாளம் தெரியாமல் போனவர்தான் நடிகர் கூல் சுரேஷ்.
இவர் பல படங்களில் காமெடி நடிகராகவும், குணசித்திர வேடங்களில், வில்லன் நடிகராகவும் நடித்திருந்தாலும் தற்போது சினிமாவில் எந்த ஒரு பட வாய்ப்பும் இல்லாமல் தனக்கான ஒரு youtube சேனலை துவங்கி வைத்து அதில் திரைப்படங்களை விமர்சனம் செய்த வீடியோக்களை வெளியிட்டு வருகிறார்.
அப்படி திரையரங்குகளில் வெளியாகும் படங்களை முதலாளாக போய் பார்த்துவிட்டு உடனே பேட்டி அளிப்பதை வழக்கமாக வைத்துள்ளார் கூல் சுரேஷ். அப்படி இவர் விமர்சனம் செய்து தற்போது பிரபலமாகிவிட்டார் என்று தான் சொல்ல வேண்டும்.
மேலும் இவர் சிம்புவின் ரசிகராக வெந்து தணிந்தது காடு படத்தை பார்க்க சென்றுள்ளார் அப்போது அங்கும் அவர் அளித்த பேட்டியின் மூலம் பிரபலமாகியுள்ளார் அதுமட்டுமல்லாமல் வெந்து தணிந்தது காடு படத்தின் ப்ரோமோஷன் பணிகளையும் எளிமையான முறையில் செய்தார். அதுமட்டுமல்லாமல் தன்னையே STR என கூறியுள்ளார். அதாவது (Suresh Taking revenge) என்று கூறி கொண்டு மன்மதனாக மாறியுள்ளார்.
இதை பார்த்த சிம்பு தன்னுடைய அடுத்த படத்தில் கூல் சுரேஷ் ஒரு முக்கிய கதாபாத்திரத்தை நடிக்க வைக்க உள்ளாராம். சிம்பு படத்தில் நடிக்கப் போகிறோம் என்ற குஷியில் நடிகர் கூல் சுரேஷ் அவர்கள் ஹீரோ லுக்கில் போஸ் கொடுத்து புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.
அது மட்டுமல்லாமல் ஒரு நடிகையின் தொடை மீது கை வைத்து போஸ் கொடுத்து உள்ளார் இந்த புகைப்படம் தற்போது இணையத்தில் செம்ம வைரல் ஆகி வருகிறது.
இதோ அந்த புகைப்படம்.