சமீபகாலமாக தொடர்ந்து பல திரைப்பிரபலங்கள் உயிரிழந்து வருகிறார்கள். எனவே கோலிவுட் வட்டாரங்கள் பெரும் சோகத்தில் இருந்து வருகிறார்கள். அந்த வகையில் இன்றைக்கு அருண்ராஜா காமராஜ் அவர்களின் மனைவி கொரோனா நோயால் உயிரிழந்துள்ளார் என்ற தகவல் வெளிவந்துள்ளது.
அதாவது ரஜினி நடிப்பில் வெளிவந்த கபாலி மற்றும் விஜய் நடிப்பில் வெளிவந்த தெறி உள்ளிட்ட திரைப்படங்களில் இடம் பெற்றிருந்த பாடலை எழுதியவர் தான் இயக்குனர் அருண் ராஜா காமராஜ்.
இதனைத் தொடர்ந்து கருப்பு பேரழகி ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் சமீபத்தில் வெளிவந்த சமூகத்திற்குத் தேவையான நல்ல கருத்துக்களை மையமாக வைத்து வெளியான திரைப்படம் தான் கானா இத்திரைப்படத்தை இவர்தான் இயக்கியிருந்தார்.
இந்நிலையில் சில கலங்கலாக இவரின் மனைவி கொரோனா தோற்று உறுதியானதால் வீட்டில் தனிமைப்படுத்த பட்டு இதற்கான சிகிச்சை மேற்கொண்டு வந்துள்ளார். அந்தவகையில் இன்று சிகிச்சை பலனின்றி காலமானார்.
இவ்வாறு தொடர்ந்து திரைப்பிரபலங்கள் உயிரிழந்து வருவதால் கோலிவுட் வட்டாரங்களில் பெரும் அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளனர். தற்பொழுது சில காலங்களாக பெரும்பாலும் திரைப்பிரபலங்கள் தான் தொடர்ந்து இறந்து வருகிறார்கள்.