சூப்பரான கதையை எடுத்துவந்த கொம்பன் முத்தையா.. அந்த வாய்ப்பை நழுவ விட்ட கமல்.? இளம் நடிகருக்கு கிடைத்த லாக்.

kamal-and-muthaiya-
kamal-and-muthaiya-

நடிகர் கமல் அண்மை காலமாக படங்களில் நடிப்பதையும் தாண்டி சின்னத்திரை, பிசினஸ் மற்றும் ராஜ்கமல் பெயரில் ஒரு தயாரிப்பு நிறுவனத்தையும் நடத்தி வருகிறார் நடிகர் கமல் இப்பொழுது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் விக்ரம் திரைப்படத்தில் அதிரடியாக நடித்து வருகிறார்.

இந்த படம் ஒரு வழியாக வெளிவர ரெடியாக இருக்கிறது இந்த படத்தில் விஜய் சேதுபதி, பகத் பாசில் மற்றும் பல டாப் நடிகர், நடிகைகள் நடித்து அசத்தி உள்ளனர் இந்த படம் முழுக்க முழுக்க ஆக்ஷன் படமாக இருக்கும் என தெரியவருகிறது இந்த திரைப்படத்தை தொடர்ந்து சிவகார்த்திகேயனை வைத்து ராஜ்கமல் தயாரிப்பு நிறுவனம் ஒரு படத்தை தயாரிக்கிறது.

அதனை தொடர்ந்து ராஜ்கமல் பேனரில் கொம்பன் முத்தையா கமலை வைத்து ஒரு படத்தை இயக்க ரெடியாக இருந்தது ஆனால் கமல் வயதானதால் படத்தில் சில விஷயங்களை செய்ய முடியாமல் போனதால் அந்த படத்தில் கமலுக்கு பதில் நடிகர் ஆர்யாவை ஒப்பந்தம் செய்தனர். இது ஒருபக்கம் இருந்தாலும் மறுபக்கம் கமல் சம்பளமாக 15  கோடி கேட்டார்.

இதனால் இந்த படம் இயக்குவதற்கான வாய்ப்புகள் சுத்தமாக  போயின. மேலும் பிரச்சனை ஏற்பட ஆரம்பித்தது அதன்பின் ஒரு வழியாக ஆர்யாவை இந்த படத்தில் நடிக்க வைத்து ராஜ்கமல் பேனரில் இந்தப் படத்தை தயாரித்து விடலாம் என கமல் முடிவு செய்தார் ஆனால் அதற்கு  ஒரு பதிலும் சொல்லாமல் மௌனமாக இருந்தார் முத்தையா.

ஆர்யா முத்தையா விடம்  நாம் வேறு ஒரு தயாரிப்பு நிறுவனத்தில் இணைந்து பணியாற்றலாம் என கூற அதற்கு முத்தையா ஓகே சொல்லிவிட்டார் யானை படத்தை இப்போது எடுத்த டிரம்ஸ்டிக் தயாரிப்பு நிறுவனம் தான் முத்தையா ஆர்யாவை வைத்து அடுத்த படத்தை தயாரிக்க ரெடியாக இருப்பதாக தகவல்கள் வெளிவருகின்றன.

டிரம்ஸ்டிக் தயாரிப்பு நிறுவனம் பெரிய இயக்குனர்கள் மற்றும் நடிகர்களை வைத்து படங்களை எதிர்நோக்கியிருந்த நிலை வான் டாக முத்தையா மற்றும் ஆர்யா வந்துள்ளதால் அவர்களைத் தக்க வைத்துக்கொள்ள ரெடியாக இருக்கிறது மேலும் எவ்வளவு தொகை கொடுத்தாலும் படத்தை இயக்க முடிவு செய்துள்ளதாம் ஆனால் கமல் படத்தின் கதை சிறப்பாக இருந்ததால் முத்தையாவிடம் தொடர்ந்து பேச்சுவார்த்தைக்கு அழைத்து உள்ளார்.

ஆனால் மீண்டும் மீண்டும் கொம்பன் முத்தையா இதிலிருந்து நழுவ வேறு வழியில்லாமல் விட்டுவிட்டாராம் தற்போது கொம்பன் முத்தையா டிரம்ஸ்டிக் தயாரிப்பு நிறுவனத்துடன் இணைந்து ஒரு மிகப்பெரிய ஒரு சூப்பர் ஹிட் படத்தை கொடுக்க ரெடியாக இருக்கின்றனராம்.