நயன்தாரா நடிப்பில் வெளிவந்த ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது திரைப்படம்தான் கோலமாவு கோகிலா. இத்திரைப்படம் நெல்சனின் அறிமுகப்படமாக இருந்தது. இத்திரைப்படத்தில் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா,விஜய் டிவி தொகுப்பாளினி ஜாக்லின், யோகி பாபு, சரண்யா பொன்வண்ணன், மொட்டை ராஜேந்திரன் உள்ளிட்ட ஏராளமான திரைப் பிரபலங்கள் ஒன்றினைந்து நடித்திருந்தார்கள்.
மேலும் இத்திரைப்படத்திற்கு அனிருத் இசையமைத்திருந்தார். இவ்வாறு இத்திரைப்படத்தில் இடம்பெற்ற பாடலுக்கும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்று மிகப்பெரிய ஹிட்டடித்தது. இவ்வாறு முன்னணி நடிகையான நயன்தாரா இத்திரைப்படத்தில் காமெடி நடிகருக்கு ஜோடியாக நடித்தால் எப்படி இதனை ரசிகர்கள் ஏற்றுக்கொள்வார்கள் என்று கேள்வி இருந்து வந்தது.
ஆனால் லைசன்ஸ் தன்னுடைய சிறந்த திரைக்கதையின் மூலம் ரசிகர்களை கவரும் வகையிலும் மேலும் வலுப்படுத்தும் வகையிலும் மிகவும் காமெடியாக இத்திரைப்படத்தினை உருவாக்கியிருந்தார். இவ்வாறு இந்த வெற்றியைப் பெற்ற நிலையில் ஹிந்தியிலும் இத்திரைப்படம் ரீமேக் ஆனது.
அந்த வகையில் சித்தார்த் சென் என்பவர் இத்திரைப்படத்தினை இந்தியில் இயக்கி இருந்தார் லைகா புரோடக்சன் உடன் இணைந்து ஆனந்த் எல் ராயின் கலர் தயாரித்துள்ளது. குட் லக் ஜெர்ரி என பெயர் வைக்கப்பட்டுள்ளது. இத்திரைப்படம் வருகின்ற ஜூலை 29ஆம் தேதியன்று நேரடியாக ஓடிடி தளத்தில் வெளியாகி இருக்கிறது.
பெரும்பாலும் பாலிவுட் படங்கள் தான் தொடர்ந்து தமிழில் ரீமேக் செய்யப்பட்டு வெற்றி பெற்று வந்தது. ஆனால் சமீப காலங்களாக தமிழ் திரைப்படங்கள் பெரும்பாலும் ஹிந்தியில் ரீமேக் செய்யப்பட்டு அமோக வெற்றியை பெற்று வருகிறது. இவ்வாறு பார்க்கும் பொழுது தமிழ் சினிமா மிகப்பெரிய உயரத்தஅடைந்துள்ளது என்பது தெரிகிறது.