தமிழ் சினிமாவில் இசையமைப்பாளராக அறிமுகமாகி பின்பு நடிகனாக நடிக்க ஆரம்பித்தவர் நடிகர் விஜய் ஆண்டனி இவர் இசையமைப்பாளராக பணியாற்றிய பொழுது பல ஹிட் பாடல்களை கொடுத்துள்ளார். இந்த நிலையில் சமீபகாலமாக விஜய் ஆண்டனி பல திரைப்படங்களில் நடித்து வருகிறார்.
நடிப்பது மட்டுமல்லாமல் தயாரிப்பாளராகவும் படத்தொகுப்பாளராகவும் இயக்குனர் என பல வகையில் தனது திறமையை நிரூபித்து வருகிறார். இந்த நிலையில் மூடர்கூடம் திரைப்படத்தை இயக்கிய இயக்குனர் நவீன் இயக்கத்தில் அருண் விஜய் மற்றும் விஜய் ஆண்டனி இணைந்து நடித்த அக்னி சிறகுகள் திரைப்படம் விரைவில் திரைக்கு வர இருக்கிறது.
அதுமட்டுமில்லாமல் இயக்குனர் பாபு யோகேஸ்வரன் இயக்கத்தில் தமிழரசன் மற்றும் இயக்குனர் செந்தில்குமார் இயக்கத்தில் காக்கி என பல திரைப்படங்களில் நடித்து வருகிறார். அதுமட்டுமில்லாமல் அடுத்ததாக இயக்குனர் அவதாரம் எடுத்துள்ளார் நடிகர் விஜய் ஆண்டனி இவர் தற்பொழுது பிச்சைக்காரன் இரண்டாவது பாகத்தை இயக்குவதன் மூலம் இயக்குனராக அவதாரம் எடுத்துள்ளார்.
அப்படியிருக்கும் நிலையில் விஜய் ஆண்டனியின் அடுத்த திரைப்படமாக வெளியாக இருக்கிறது கோடியில் ஒருவன் இந்த திரைப்படம் செப்டம்பர் 17ம் தேதி திரைக்கு வர இருக்கிறது இந்த திரைப்படத்தை இயக்குனர் அனந்தகிருஷ்ணன் எழுதி இயக்கியுள்ளார். ஷங்கர் படத்தை செந்தூர் பிலிம் இன்டர்நேஷனல் சார்பில் தயாரிப்பு ராஜா தயாரிக்க இன்ஃபினிட்டி பிலிம் வர்ஷன் நிறுவனம் கோடியில் ஒருவன் திரைப்படத்தை வழங்குகிறது.
மேலும் இசையமைப்பாளர் நிவாஸ் கே பிரசன்னா இசையில் உதய குமார் ஒளிப்பதிவு செய்ய இசை அமைப்பாளர் விஜய் ஆண்டனி படத்தொகுப்பு செய்து கோடியில் ஒருவன் திரைப்படத்தின்முழு படத்தையும் முடித்துள்ளார்கள் இந்த நிலையில் ஸ்னீக் பீக் வீடியோ சமூக வலைத்தளத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.