கோ படத்தை நடிகர் சிம்பு மற்றும் தவறவிடல.. இந்த நடிகரும் தான் – யார் அது தெரியுமா.?

ko
ko

திரை உலகை பொறுத்தவரை சிறந்த கதைகளை நடிகர்கள் ஏதோ ஒரு காரணத்தினால் தவற விடுவது வழக்கம் அதனால் அந்த கதை மற்றொருவருக்கு அந்த கதை சிறந்த திரைப்படமாக அமைகிறது அந்த வகையில் கேவி ஆனந்த் இயக்கத்தில் ஜீவா நடிப்பில் 2011ஆம் ஆண்டு வெளியாகி பிளாக்பஸ்டர் ஹிட் அடித்த திரைப்படம் “கோ”.

இந்த திரைப்படத்தில் ஜீவா ஹீரோ நடித்து அசத்தி இருப்பார் அவருடன் கைகோர்த்து கார்த்திகா, அஜ்மல் மற்றும் பல்வேறு டாப் நட்சத்திர பட்டாளங்கள் நடித்து அசத்தினார். இந்த திரைப்படத்தில் முதன் முதலில் நடிக்கும் வாய்ப்பு முதலில் நடிகர் சிம்புவுக்கு தான் போனதாம். ஆனால் அப்பொழுது அந்த வாய்ப்பை அவர் தவற விடவே..

நடிகர் ஜீவாவுக்கு கை மாறியது.  இந்த படம் ஜாலியாகவும் அதே சமயம் சில கருத்துகளை எடுத்துரைக்கும் படமாக இருந்ததால் ஜீவா படத்தின் கதையை சரியாக புரிந்துகொண்டு கமிட்டாகி நடித்து இந்த திரைப்படம் அவருக்கு அவரது சினிமா கேரியரில் ஒரு பெஸ்ட் படமாக இப்போதும் இருந்து வருகிறது.

தற்போது வந்த தகவலின் படி கோ படத்தில் சிம்புவும் தாண்டி வேறு ஒருவருக்கு இந்த படத்தில் நடிக்க வாய்ப்பும் போனதாம் அந்த நடிகர் வேறு யாருமல்ல நடிகர் பரத் தான் படக்குழு அவரை சந்தித்து உள்ளது ஆனால் அவர் சில காரணங்களால் இந்தப் படத்தில் நடிக்கும் வாய்ப்பை தவறவிட..

நடிகர் ஜீவாவுக்கு தான் கடைசியாக சென்றதாக கூறப்படுகிறது இந்த படம் வெளியாகி பிளாக்பஸ்டர் ஹிட் அடித்த பிறகு தான் நடிகர் பரத் ரொம்ப வருத்தப்பட்டாராம்.