சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருப்பவர் தளபதி விஜய். தற்போது இப்படத்தின் இசை வெளியீட்டு விழாவை பற்றி தகவல் ஒன்று வெளியாகி உள்ளது அது என்னவென்றால் மாஸ்டர் படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அதற்கு பதிலாக பேரு ஒரு இடத்தில் நடக்க பட உள்ளது என்ன தகவல் தற்போது வந்துள்ளது.
மாஸ்டர் படத்தை சேவியர் பிரிட்டோ தயாரிப்பில் உருவாகி வருகிறது இப்படத்தை லோகேஷ் கனகராஜ் அவர்கள் இயக்கிவருகிறார். இப்படத்தில் முன்னணி நடிகரான தளபதி விஜய் நடிக்கிறார் இவருடன் சேர்ந்து தற்பொழுது மக்கள் செல்வன் விஜய் சேதுபதி அவர்களும் நடிக்கிறார்.இவர்கள் இருவரும் முதன்முறையாக சேர்ந்து நடித்துள்ளனர். இப்படம் ஏப்ரல் மாதத்தில் வெளிவரும் என தகவல் வெளியாகியுள்ளது
காதலர் தினத்தை முன்னிட்டு மாஸ்டர் படத்திலிருந்து சிங்கிள் ட்ராக் பாடல் குட்டி கதை வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல பெயர் பெற்றது. இந்த பாடலை அனிருத் இசையில் அருண் காமராஜர் வரிகளில் தங்கிலீஷ் பாடலாக உருவாகி வந்தத குட்டிக்கதை ஸ்டோரி பாடல் உலக அளவில் சுமார் 20 மில்லியன் பார்வையாளர்கள் பார்த்துள்ளனர். இப்பாடலை நடிகர் விஜய் மிகச் சிறப்பாக பாடி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதனைத் தொடர்ந்து மாஸ்டர் படத்தின் இசை வெளியீட்டு விழா எப்பொழுது என ரசிகர்கள் எதிர்பார்த்து வருகின்றனர். ஏனென்றால் இசை வெளியீட்டு நிகழ்ச்சியில் விஜய் அவர்கள் வருமான வரித்துறையினர் குறித்தும் தனது வளர்ச்சியை தடுக்க நினைக்கிறார்கள் என்பது குறித்தும் அவர் ஒரு குட்டி கதை சொல்வார் என பலர் எதிர்பார்த்து வருகின்றனர்.
நிலையில் தற்பொழுது ஒரு திடுக்கிடும் தகவல் ஏற்பட்டுள்ளது. அது என்னவென்றால் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெறப் போவதில்லை என்று தகவல் தற்போது வெளியாகியுள்ளது சென்னைக்கு பதிலாக கோவையில் மாஸ்டர் வெளியீட்டு விழா நடைபெறும் என ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
இந்தநிலையில் இப்படத்தில் நடித்து வரும் சாந்தனு அவர்கள் நேற்று முன்தினம் கோவையில் உள்ள கல்லூரி நிகழ்ச்சியில் கலந்துகொண்டார் அவர் கூறியது. மாஸ்டர் குழுவுடன் கோவைக்கு வெயிடா வருவோம் தயாராக இருங்க எனவும் கூறியுள்ளார். விஜய் அவர்கள் சென்னையின் தனது பலத்தை காட்டிய நிலையில் தற்பொழுது கோவையில் தனது ரசிகர் பலத்தை நிரூபிக்க இது ஒரு நல்ல வாய்ப்பாக இருக்கும் என ஊடகங்கள் தெரிவிக்கின்றன.