பதினாறாவது ஐபிஎல் தொடரில் இன்று சிஎஸ்கே அணியும் KKR அணியும் நேருக்கு நேராக மோதிக்கொண்டது இதில் முதலில் டாஸ் வென்ற KKR அணி பவுலிங் தேர்வு செய்தது. அதனால் சிஎஸ்கே அணி பேட்டிங் செய்தது. இந்தப் போட்டி சிஎஸ்கே அணிக்கு மிகவும் விறுவிறுப்பாக இருக்கும் என எதிர்பார்க்கப்பட்டது போல் போட்டியின் வீரர்கள் மிகவும் சிறப்பாக விளையாடி வருகிறார்கள்.
அந்த வகையில் முதலில் பேட்டிங் செய்த சிஎஸ்கே அணி தொடக்க வீரர்களான ருத்ராஜ், கான்வே இருவரும் களமிறங்கினார்கள் இதில் ருத்ராஜ் 20 பாலில் 35 ரன்கள் எடுத்துக் கொடுத்தார் இதில் மூன்று சிக்ஸர்களும் இரண்டு பவுண்டரிகளும் அடங்கும். இவர் ஷர்மா பாலில் அவுட் ஆனார். இதனைத் தொடர்ந்து கான்வே 40 பந்துகளில் 56 ரன்கள் எடுத்தார் இதில் மூன்று சிக்ஸ்களும் நான்கு பௌண்டரிகளும் அடங்கும் இவர் வருண் சக்கரவர்த்தி பாலில் அவுட் ஆனார்.
அடுத்ததாக களம் இறங்கிய ரகானே வெறும் 29 பாலில் 71 ரன்கள் எடுத்து அவுட் ஆகாமல் விளையாடி வருகிறார் இதில் ஐந்து சிக்ஸர்களும் ஆறு பவுண்டரிகளும் அடங்கும். மேலும் துபே 21 பந்துகளில் 50 ரன்கள் விலாசியுள்ளார் இதில் 5 சிக்ஸர்களும் இரண்டு பவுண்டரிகளும் அடங்கும். இவர் ஜாசன் ராய் பாலில் தன்னுடைய விக்கெட்டை பறி கொடுத்தார். அடுத்ததாக ரவீந்திர ஜடேஜா 8 பாலில் 18 ரன்கள் எடுத்து தன்னுடைய விக்கெட்டை பறி கொடுத்தார்,டோனி 3 பாலுக்கு 2 ரன்கள் எடுத்தார்.
சிஎஸ்கே டீம் முதல் விக்கெட் இழந்தபோது 7.3 ஓவரில் 73 ரன்கள் எடுத்திருந்தார்கள். இதனைத் தொடர்ந்து இரண்டாவதாக கான்வே அவுட் ஆகும் பொழுது 12.1 ஓவரில் 109 ரன்கள் எடுத்திருந்தார்கள். அடுத்ததாக தூபே அவுட் ஆகும் பொழுது 17.3 ஓவரில் 194 ரன்கள் எடுத்திருந்தார்கள் சிஎஸ்கே அணி. நான்காவது ஜடேஜா விக்கெட் ஆன பொழுது 232 ரன்கள் நாலு விக்கெட் இழப்பிற்கு 19.4 ஓவர் முடிவடைந்தது.
இதில் வருண் சக்கரவர்த்தி ஒரு விக்கெட்டையும் குல்வண்ட் ஒரு விக்கட்டையும் ஷர்மா ஒரு விக்கெட்டையும் எடுத்திருந்தார்கள். மொத்தத்தில் 20 ஓவர் முடிவில் 235 ரன்கள் எடுத்திருந்தது 236 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கியுள்ளது KKR அணி.