நடிகர் கமலஹாசன் தமிழ் சினிமா உலகில் தவிர்க்க முடியாத ஒரு பிரபலம் இவர் வருடத்திற்கு ஒரு படங்களை கொடுத்து வருகிறார் அந்த வகையில் இயக்குனர் ஷங்கருடன் கைகோர்த்து இந்தியன் 2 திரைப்படத்தில் தற்போது விறுவிறுப்பாக நடித்து வருகிறார் இப்படி ஓடிக் கொண்டிருக்கும்..
கமலை பற்றி பல தகவல்கள் இணையதள பக்கங்களில் உலாவுகின்றன அப்படி ஒரு தரமான சம்பவத்தை தான் நாம் பார்க்க இருக்கிறோம்.. 1988 ஆம் ஆண்டு கமலஹாசன், நிரோஷா நடிப்பில் வெளிவந்த திரைப்படம் சூரசம்ஹாரம்.. இதை சித்ரா லக்ஷ்மணன் தயாரித்து, இயக்கியிருந்தார். இந்தப் படத்தின் படப்பிடிப்பில் ஒரு தரமான சம்பவம் நடந்தது.
அதாவது படத்தின் கதைப்படி ஒரு காட்சியில் கமலும், நிரோஷாவும் முத்தம் கொடுக்கும்படி கதைகள் அமைக்கப்பட்டு இருந்தது இது கதைக்கு முக்கியமான மாதாக இருந்ததால் படக்குழு படமாக தொடங்கினர். கமலஹாசனும், ஹீரோயினும் படிக்கட்டு ஏறிய பின் உடனே முத்தம் கொடுத்துக் கொள்ள வேண்டும் இதுதான் ஷாட்.. இதற்கு ஹீரோயின் நிரோஷாவும் அனுமதி கொடுத்தார்.
அடுத்த நாள் இந்த காட்சி படமாகப்பட்டது. படிக்கட்டுகள் ஏறிய பிறகு கமலஹாசனும், நிரோஷாவும் முத்தம் கொடுக்க வேண்டும் ஆனால் திடீரென ஹீரோயின் அந்த காட்சியில் நடிக்க மாட்டேன் என்று கூறி விட்டார்.. உடனே இயக்குனர் சித்ரா லட்சுமணன் நேற்று கேட்கும் பொழுது நடிக்கிறேன் என சொல்லிவிட்டு திடீரென மறுத்தால் எப்படி என கேட்க அதற்கு ஏதோ ஒரு தயக்கத்தால் அந்த காட்சி நடிக்க முடியவில்லை என நிரோஷா கூறிவிட்டாராம்..
இதனால் இயக்குனர் சித்ரா லக்ஷ்மணனுக்கும், ஹீரோயினுக்கும் மனக்கசப்பு ஏற்பட்டு இரண்டு மூன்று நாட்களில் பேசிக் கொள்ளவில்லையாம் அதன் பிறகு ஒருநாள் ஹீரோயின் முத்தக் காட்சியை படமாக எடுக்கலாம் என கூறினாராம்.. உடனே இயக்குனர் சித்ரா லட்சுமணனும் சரி என ஒப்புக்கொண்டாராம் ஆனால் முத்த காட்சி படமாக்கப்படும்போது கமல் வேண்டாம் என உதவி தள்ளி விட்டாராம்..