தென்னிந்திய சினிமா துறையில் முன்னணி நடிகராக வலம் வந்தவர் கிஷோர்.இவர் ஹீரோவாக மட்டுமல்லாமல் வில்லனாகவும் தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி மக்கள் மட்டும் ரசிகர்களை கவர்ந்தார் இவர் முக்கியத்துவம் உள்ள கதைகளைத் தேர்ந்தெடுத்து நடித்து வருவது வழக்கம் அந்த வகையிலே ஆடுகளம், கபாலி போன்ற முன்னணி நடிகரின் படத்தில் தனது மார்க்கெட்டை உயர்த்திக் கொண்டார் அதுமட்டுமல்லாமல் இவர் ஹீரோவாக ஹரிதாஸ் என்ற படத்தில் நடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதனை தொடர்ந்து அவர் தெலுங்கு, கன்னடம் போன்ற பிற மொழி படங்களில் தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி பிஸியாக வலம் வந்து கொண்டிருக்கிறார். நடிகர் கிஷோர் அவர்கள் சினிமாவையும் தாண்டி விவசாயத்தில் அதிக ஈடுபாடு கொண்டவர் தற்போது ஊரடங்கு உத்தரவு காரணமாக தனது மனைவியுடன் தற்போது இயற்கை விவசாயம் செய்து வருகிறார்.
கிஷோருக்கு கிராமத்தில் உள்ள வீட்டில் டிவி கூட இல்லாமல் எளிமையாக வாழ்ந்து வருகிறார். இந்த நிலையில் விவசாயம் குறித்து கிஷோர் பேசியது எங்கள் வீட்டுக்கு தேவையான உணவுகளை நாங்களே தயார் செய்து கொள்கிறோம் அதேசமயத்தில் குடும்பத்தோடு விவசாயத்துடன் செலவிட்டு வருகிறேன். இது என் வாழ்க்கையில் பொற்காலம். எங்கள் ஊரில் மக்கள் குறைவு அதுவும் இடைவெளி விட்டு தான் இருக்கும் எனவே எங்கள் ஊரில் கொரோனா பாதிப்பு கிடையாது.
எங்கள் தோட்டத்தில் நாங்கள் தென்னை ,கொய்யா, சப்போட்டா, மா, எலுமிச்சை, பப்பாளி உட்பட பல வகையான பழவகை மற்றும் காய்கறி வளர்த்து வருகிறோம். அதோடு இரண்டு சின்ன கறவை மாடுகளும் இருக்கிறது இந்த மாடுகளுக்கு நாங்கள் பிரபலங்களின் பெயரை வைத்துள்ளோம் அதிலொன்று ஜெயலலிதா அம்மா இறந்த தினத்தில் பிறந்ததால் அதற்கு ஜெயலலிதா என்றும் மற்றொன்று கபாலி பட ரிலீஸ் என்று பிறந்தால் கபாலி என்றும் பெயர் வைத்துள்ளோம் என்று கூறியுள்ளார் அதில் ஜெயலலிதா ரொம்ப சமத்தாக இருப்பாங்க, கபாலி ரொம்ப குறும்பு செய்வான்.
நாங்கள் தற்போது பெங்களூருவில் இயற்கை அங்காடி ஒன்றை நடத்தி வரும் அதுமட்டுமில்லாமல் பேக்கிரி ஒன்றையும் கவனித்து வருகிறோம் பல சுவாரஸ்யமான விஷயங்களை நம்முடன் பகிர்ந்து கொண்டார்.