Gemini kiran rathod : தமிழ் சினிமாவில் மட்டுமல்லாமல் பல இடங்களில் பெண்களுக்கு தொல்லை இருந்து கொண்டு தான் வருகிறது. அதிலும் காஸ்டிங் கோச் நிலைமை சினிமாவில் இருந்து வருகிறது, இது குறித்து பல நடிகைகள் மற்றும் சீரியல் பிரபலங்கள் தங்களுக்கு நடந்த கசப்பான அனுபவங்கள் பற்றி வெளிப்படையாக பேசி வருகிறார்கள். அந்த வகையில் பல முன்னணி நடிகைகள் கூட இது குறித்து பேசி உள்ளார்கள்.
அப்படிதான் தற்பொழுது ஜெமினி திரைப்படத்தில் நடித்து வந்த கீரன் பட வாய்ப்புக்காக படுக்கைக்கு அடுத்தது குறித்து பேசி உள்ளார்.
தமிழ் சினிமாவில் ஜெமினி என்ற திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் கிரண் இவர் வில்லன், பரசுராம், அரசு, வின்னர், தென்னவன், நியூ, நாளை நமதே, சகுனி என பல திரைப்படங்களில் நடித்துள்ளார். தமிழை தாண்டி மலையாளம் கன்னடம் என பல மொழிகளிலும் நடித்துள்ளார். சமீப காலமாக நடிகைகளிடம் பேட்டி எடுக்கும் பொழுது உங்களுடைய கசப்பான அனுபவம் என்ன என பலரும் கேள்வி கேட்டு வருகிறார்கள்.
அந்த வகையில் கிரன் அவர்களிடம் இது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது அதற்கு பதில் அளித்த கிரண் நான் தென்னிந்திய சினிமாவில் நடித்து பிரபலம் அடைந்த பிறகு ஹிந்தி பக்கம் சென்றேன் அங்கு வரவேற்பு இல்லாததால் மீண்டும் சென்னைக்கு வந்தேன். எனக்கு சினிமாவில் நிறைய கசப்பான அனுபவங்கள் ஏற்பட்டது பட வாய்ப்பு முதலில் கொடுப்பார்கள் அதன் பிறகு படுக்கைக்கு அழைத்தனர் இதனால் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளானேன்.
பட வாய்ப்புக்காக முதலில் ஒப்பந்தம் போடுவார்கள் அதன் பிறகு அவர்களுடைய சுய ரூபத்தை காட்டுவார்கள் இன்று இரவு வருகிறாயா இல்லையா என சர்வ சாதாரணமாக கேட்பார்கள் உடனே அந்த திரைப்படத்திலிருந்து நான் வெளியே வந்து விடுவேன் நடிப்பை விட்டு விட்டு முழுமையாக வெளிவந்து ஏதாவது வியாபாரம் செய்யலாம் என முடிவெடுத்தேன்..
அந்த நேரத்தில் ஒருவரை நான்கு வருடங்களாக காதலித்து வந்தேன் ஆனால் அவர் நல்லவர் இல்லை என தெரிய வந்ததும் என் காதலை முறித்துக் கொண்டேன் இப்பொழுது அந்தப் பிரச்சனையும் நீங்கி எனக்கு ஒரு சில பட வாய்ப்புகளும் வந்து கொண்டிருக்கிறது தற்பொழுது நான் யாரையும் காதலிக்கவில்லை அதேபோல் திருமணம் செய்து கொள்ள எண்ணமும் இல்லை என கூறியுள்ளார்.