Ritika Singh; சமீப காலங்களாக ஏராளமான நடிகைகள் முன்னணி நடிகர்களின் திரைப்படங்களில் ஒரு பாடலுக்கு கவர்ச்சியான நடனம் ஆடுவதை வழக்கமாக வைத்திருக்கின்றனர். அந்த வகையில் சமந்தாவின் நடனத்திற்கு மக்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பு கிடைத்திருந்த நிலையில் இதனை அடுத்து சமந்தாவிற்கு டஃப் கொடுக்கும் அளவிற்கு துல்கர் சல்மானுடன் கவர்ச்சியில் செம குத்தாட்டம் போட்டுள்ளார் நடிகை ரித்திகா சிங்.
மலையாள சினிமாவின் சூப்பர் சூப்பர் ஸ்டாராடா மம்முட்டியின் மகனாக சினிமாவிற்கு அறிமுகமானவர்தான் துல்கர் சல்மான். இதனை தொடர்ந்து மலையாள திரைப்படங்களில் நடித்து வந்த இவர் தமிழிலும் பல திரைப்படங்களில் நடித்திருக்கிறார். அந்த வகையில் இவருக்கென பெரும் ரசிகர் பட்டாளமே இருந்து வருகிறது.
தற்பொழுது துல்கர் சல்மான் king of kotha என்ற திரைப்படத்தில் நடித்துள்ள நிலையில் இந்த படம் தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் வெளியாக இருக்கிறது. அப்படி king of kotha படத்தில இடம்பெற்றிருக்கும் ஐட்டம் பாடலான கலாட்டாக்காரன் என்ற பாடல் சோசியல் வெளியாகி வைரலாகி வருகிறது.
இந்த பாடலில் நடிகை ரித்திகா சிங் கவர்ச்சியில் ஆட்டம் போட்டிருக்கும் நிலையில் இதனை பார்த்து ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்து இருக்கிறார்கள். அதாவது நடிகை சமந்தாவும் ஊ சொல்றியா மாமா பாடலுக்கு கவர்ச்சியில் ஐட்டம் நடனமாடி அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியனார். ஆனால் அவருக்கே டஃப் கொடுக்கும் அளவிற்கு செம குத்தாட்டம் போட்டுள்ளார்.
இந்த வீடியோ சோசியல் மீடியாவில் வைரலாக லைக்குகள் குவிந்து வருகிறது. அதாவது, king of kotha படத்தில் இடம்பெற்றிருக்கும் கலாட்டாக்காரன் பாடலின் ரிலீஸ் வீடியோவை பட குழு வெளியிட்டுள்ளது. இதோ அந்த வீடியோ..