ஓ சொல்றியா மாமா ஓஓ சொல்றியா என்ற புஷ்பா பாடலுக்கு ப்ரோ டான்ஸ் ஆடி அசத்திய கிலி பால்.! வீடியோவை பார்த்து சிலாகித்த ரசிகர்கள்

samantha-pushba
samantha-pushba

சினிமாவில் ஒரு சில திரைப்படங்கள் பல்வேறு மொழிகளில் வெளியாகி மாபெரும் வெற்றி அடையும் அந்த வகையில் சமீபத்தில் சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜுன் ராஷ்மிகா மந்தனா, பகத் பாசில் ஆகியோர் நடிப்பில் வெளியாகி திரைப்படம்தான் புஷ்பா இந்த திரைப்படம் டிசம்பர் 17ஆம் தேதி வெளியானது. மேலும் இந்த திரைப்படம் தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி என  பல்வேறு மொழிகளில் வெளியாகி பிரமாண்ட வெற்றியை அடைந்தது.

தற்பொழுது இந்த திரைப்படம் OTT இணையதளத்திலும் வெளியாகி ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கிறது. இந்த திரைப்படத்தில் சமந்தா ஒரே ஒரு பாடலுக்கு ஐட்டம் டான்ஸ் ஆடியுள்ளார். இந்த பாடல் பட்டிதொட்டி எங்கும் பிரபலமானது அதுமட்டுமில்லாமல் இந்த பாடலுக்கு பல்வேறு தரப்புகளும் விமர்சனம் செய்தார்கள்.

ஆண்களை தவறாக சித்தரிப்பது போல் இந்த பாடல் இருப்பதாக பெரும் சர்ச்சை எழுந்தது. என்னதான் ரசிகர்களிடம் வைரலாக வந்தாலும் சர்ச்சையை சந்தித்தது என்பது குறிப்பிடத்தக்கது அதேபோல் இந்த படத்தில் ராஷ்மிகா மந்தனா சாமி பாடலுக்கு நடனமாடினார் இந்த பாடலும் பெரும் சர்ச்சையை சந்தித்தது இந்த பாடலில் ராஷ்மிகா மந்தனா  கிளாமர் கொஞ்சம் தூக்கலாக இருந்தது.

இதற்கும் பெரும் விமர்சனம் எழுந்தது இந்த நிலையில் பல்வேறு பிரபலங்கள் புஷ்பா பட பாடலுக்கு சமூக வலைதளமான இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ரீல்ஸ் செய்து வீடியோவை வெளியிட்டு வந்தார்கள் அந்த வகையில் பல்வேறு பிரபலங்களும் வெளியிடும் வீடியோக்கள் நல்ல விமர்சனங்களை பெற்று வைரல் ஆனது.

யாஷிகா ஆனந்த், ஷாலு ஷம்மு என பல்வேறு பிரபலங்களும் புஷ்பா பட பாடலுக்கு நடனமாடிய விட்டார்கள் அந்த வகையில். புஷ்பா படத்தில் இடம் பெற்ற ஓ சொல்றியா மாமா என்ற பாடலுக்கு மின்னல் வேகத்தில் உலகளவில் ட்ரெண்டாகி வருகிறது. இந்த பாடலுக்கு தான் டிக் டாக் டான்சர் கிளிபால் ப்ரோக் டான்ஸ்  ஆடி வீடியோவை வெளியிட்டுள்ளார் இந்த வீடியோ ரசிகர்களிடம் வைரலாகி வருகிறது.

வீடியோவை பார்க்க இங்கே கிளிக் செய்யவும்