90 காலகட்டங்களில் ரசிகர்களின் கனவு கன்னியாக திகழ்ந்து வந்தவர் தான் குஷ்பூ இவர் ரஜினி,கமல் போன்ற பல முன்னணி நடிகர்களுக்கு ஜோடி போட்டு நடித்து ரசிகர்களிடையே மிகவும் புகழ் பெற்று விளங்கிவிட்டார்.இவர் நடித்த அனைத்து திரைப்படங்களுமே ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றிருக்கும் மேலும் தற்பொழுது குஷ்பூ படங்களில் நடிக்கவில்லை என்றாலும் அரசியலில் ஈடுபட்டு வருகிறார்.
ஒரு கட்டத்தில் இவருக்கு திரைப்பட வாய்ப்பு எதுவும் கிடைக்காமல் சின்ன திரையில் ஒளிபரப்பாகி வந்த பல சீரியல்களிலும் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.அதனைத் தொடர்ந்து குஷ்பூ முழு நேர வேலையாக அரசியலில் ஈடுபட்டு விட்டார் என்றே கூறலாம் மேலும் சமீபத்தில் குஷ்பூ தேசிய மகளிர் ஆணைய குழு உறுப்பினராகவும் தேர்வு செய்யப்பட்டிருந்தார்.இந்நிலையில் தற்போது குஷ்பூவிற்கு உடல்நிலை மிகவும் மோசமானதால் அவர் ஹைதராபாத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருக்கிறார்.
இந்த தகவலை அறிந்த இவரது ரசிகர்கள் பலரும் என்ன ஆச்சு அவங்களுக்கு என்று பதறிப் போய் அவங்க நல்லா இருக்காங்களா என பலவிதமான கேள்விகளை சமூக வலைதளங்களில் கேள்வி எழுப்பி வந்த நிலையில் தனது புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களுக்கு தெரிவித்துள்ளார். அதாவது குஷ்பூவிற்கு வைரஸ் தொற்று ஏற்பட்டு மிகவும் அதிக காய்ச்சல் வந்துள்ளதாம்.
அதனால்தான் குஷ்பூ புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களுக்கு தகவலை தெரிவித்துள்ளார் மேலும் இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் பலரும் குஷ்பூ மிகவும் ஆள் அடையாளம் தெரியாமல் மாறிவிட்டார்.பார்ப்பதற்கு மிகவும் ஒல்லியாகிவிட்டார் என வருத்தப்பட்டு இந்த புகைப்படத்தை இணையத்தில் ஷேர் செய்து வருகிறார்கள்.
மேலும் ஒரு சில ரசிகர்கள் இவர் குணமடைந்து வீடு திரும்ப நாங்கள் இறைவனிடம் பிரார்த்தனை செய்கிறோம். என கூறுவது மட்டுமல்லாமல் இவர் மீண்டும் பழையபடி சில திரைப்படங்களில் நடித்தால் நாங்கள் மிகவும் மகிழ்ச்சி அடைவோம் என்றும் கருத்து தெரிவித்து வருகிறார்கள்.