ஆள் அடையாளமே தெரியாமல் இருக்கும் குஷ்பூ.! இணையத்தில் வைரலாகும் அவரது சிறுவயது புகைப்படம்.!

kushboo

ஒரு காலத்தில் தமிழ் திரையுலகில் நடித்து வந்த அனைத்து நடிகைகளையும் ஓரம் கட்டும் அளவிற்கு தனது நடிப்பை இயல்பாக காட்டி வந்த நடிகை குஷ்பூ இவர் சின்னதம்பி திரைப்படத்தின் மூலம் தமிழ் திரை உலகில் காலடி எடுத்து வைத்தாலும் இதனைத் தொடர்ந்து கமல்,ரஜினி,கார்த்திக்,பிரபு,மோகன் என பல முன்னணி நடிகர்களுடன் ஜோடி போட்டு நடித்து பல திரைப்படங்களை கைப்பற்றி ரசிகர்களிடையே பட்டிதொட்டியெங்கும் புகழ்பெற்று கொடிகட்டி பறந்து வந்தார்.

இவரது நடிப்பில் அப்பொழுது வெளியான பல திரைப்படங்கள் வசூல் ரீதியாக அதிகம் வசூல் செய்திருக்கும் அந்தவகையில் பார்த்தால் இவர் நடித்த அனைத்து திரைப்படங்களையும் இவரது ரசிகர்களால் தற்பொழுதும் மறக்க முடியவில்லை மேலும் இவரது நடிப்பில் தற்போது ஒரு சில திரைப்படங்கள் உருவாகி வருகிறது.

ஆம் இவரது நடிப்பில் சிறுத்தை சிவா இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து வரும் அண்ணாத்த திரைப்படத்தில் இவர் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார் இதனைத்தொடர்ந்து இவரது திருமண வாழ்க்கையில் இயக்குனர் சுந்தர் சி மணமுடித்துக் கொண்டார் தற்போது இவர்களுக்கு இரண்டு பெண் பிள்ளைகள் இருக்கிறார்கள் என்பதை நாம் அறிவோம் வெள்ளித்திரை,சின்னத் திரையில் பணியாற்றி வரும் இவர் அவ்வபொழுது அரசியலிலும் ஈடுபட்டு வருகிறார்.

இவரது நடிப்பில் உருவாகிவரும் திரைப்படங்களை இவரது ரசிகர்கள் மிக ஆவலாக எதிர்பார்ப்பது எதற்கு என்றால் இவர் அந்த காலத்தில் நடித்த பல திரைப்படங்களில் இவரது ரசிகர்களை கவர்ந்து விட்டது அதேபோல் இவர் நடிக்கும் திரைப்படங்களை இவரது ரசிகர்களால் மறக்க முடியாது அந்த அளவிற்கு குஷ்பூ அண்ணாத்த திரைப்படத்தில் நடித்து வருவதால் இவரது ரசிகர்கள் அதிக ஆர்வமுடன் எதிர்பார்த்து வருகிறார்கள்.

kushboo2
kushboo2

மேலும் இவரது குடும்ப புகைப்படம் சமூக வலைதள பக்கங்களில் சமீபகாலமாகவே வைரலாகி வருவதை நாம் பார்த்து வருகிறோம் அதேபோல் தற்போது இவரது புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகியுள்ளது அந்த புகைப்படம் என்னவென்று கேட்டால் குஷ்பூ சிறு வயதில் இருக்கும் புகைப்படம் தான் மிகவும் சிறுமியாக இருக்கும் பொழுது எடுத்த புகைப்படம் இணையத்தில் மிக வேகமாக வைரலாகி வருகிறது.