திடீரென மருத்துவமனையில் அட்மிட் ஆன குஷ்பூ.! புகைப்படத்தை பார்த்து உருகிப் போகும் ரசிகர்கள்.!

kushboo
kushboo

ஒரு கால கட்டத்தில் ரசிகர்களின் கனவு கன்னியாக திகழ்ந்து வந்தவர் குஷ்பூ இவர் நடித்த படங்கள் அனைத்துமே இவரது ரசிகர்களுக்கு பிடித்த திரைப்படங்களாக தற்பொழுது வரை திகழ்ந்து வருகிறது. அதற்கு முக்கிய காரணம் இவர் எந்த திரைப்படத்தில் நடித்தாலும் தனது அழகான நடிப்பை காட்டி மக்களை கவர்ந்து விடுவார்.

மேலும் இவர் தற்பொழுது வெள்ளி திரையில் அதிகமாக திரைப்படங்களில் நடிக்கவில்லை என்றாலும் சின்னத்திரை சீரியல்களில் நடித்து வருகிறார் அவ்வாறு பார்த்தால் இவர் கலர்ஸ் தமிழில் நடித்து வந்த சீரியல் சில வாரங்களுக்கு முன்பு தான் நிறைவடைந்தது.

இதனைத் தொடர்ந்து குஷ்பூ விஜய் நடிக்கும் வாரிசு திரைப்படத்தில் நடிப்பதாக தகவல் வெளியாகிய நிலையில் அதனை குஷ்பூ மறுத்துள்ளார் இந்நிலையில் இன்று குஷ்பூ மருத்துவமனையில் அட்மிட் ஆகி இருக்கும் போட்டோவை வெளியிட்டு ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்துள்ளார்.

ஆம் அதாவது coccyx bon ல் அவருக்கு செய்திருக்கும் சர்ஜரியால் அவரால் இன்னும் இரண்டு நாட்களுக்கு முழு ரெஸ்ட் எடுக்க வேண்டும் என மருத்துவர்கள் கூறியுள்ளார்களாம் மேலும் அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் ஹேப்பி விஜயதசமி என்று ரசிகர்களுக்கு பதிவு செய்துள்ளார் அவர் போட்ட ட்விட் தற்பொழுது ரசிகர்கள் மத்தியில் மிக வேகமாக வைரலாகி வருகிறது.

இதனைப் பார்த்த ரசிகர்கள் பலரும் உங்களுக்கு இந்த நல்ல நாளிலா இப்படி நடக்க வேண்டும் எங்களுக்கு மிகவும் மன கஷ்டமாக இருக்கிறது என்று கூறுவது மட்டுமல்லாமல் நீங்கள் கூடிய சீக்கிரம் குணமடைந்து வருவதற்கு நாங்கள் இறைவனிடம் வேண்டுகிறோம் என்றும் கமெண்ட் செய்து வருகிறார்கள்.