80 மற்றும் 90களில் தமிழ் சினிமாவில் கொடி கட்டி பறந்த நடிகைகளில் ஒருவர்தான் குஷ்பூ இவர் ரஜினி, கமல், சத்யராஜ், சரத்குமார், என அப்போதைய முன்னணி நடிகர்களுடன் ஜோடி போட்டு பல திரைப்படங்களில் நடித்துள்ளார். மேலும் நடிகை குஷ்பு அவர்கள் சினிமாவை தொடர்ந்து சின்னத்திரையிலும் ஒரு சில சீரியல்களில் நடித்துள்ளார்.
சீரியலிலும் தனக்கென ஒரு ரசிகர்கள் பட்டாளத்தை உருவாக்கினார். இதைத் தொடர்ந்து நடிகை குஷ்பு அவர்கள் தற்போது குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார். இதனை தொடர்ந்து நடிகை குஷ்பு அவர்கள் விஜய் மற்றும் ராஷ்மிகாவுடன் செல்பி எடுத்துக் கொண்ட புகைப்படம் இணையத்தில் செம்ம வைரல் ஆனது.
தற்போது விஜய் அவர்கள் வாரிசு திரைப்படத்தில் நடித்த வருகிறார்கள் இந்த படத்தின் ஸ்டில்ஸ் இரண்டு நாட்களாக இணையத்தில் வைரலாகி வருகிறது அதில் குஷ்பூ எடுத்த செல்பியும் உள்ளது. முன்னதாக நடிகை குஷ்பு அவர்கள் வாரிசு திரைப்படத்தில் நடிக்கவில்லை என்ற தகவல் வெளியாகி இருந்தது.
அப்போது நடிகர் விஜய் மற்றும் ராஷ்மிகாவுடன் எடுத்த புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியானது அப்போது குஷ்பூவும் வாரிசு திரைப்படத்தில் நடிக்கிறார் என்று நினைத்திருந்தனர் ரசிகர்கள். அதற்கு வாரிசு சூட்டிங் ஸ்பாட் இருக்கு சென்றபோது ஜாலியாக எடுத்தது என்றும் படபிடிப்பு நான் இருக்கும் இடத்தின் அருகாமையில் நடந்த என்றும் அதனை அறிந்து விஜய்க்கான சென்றேன் என்றும் குஷ்பூ சொன்னதாகவும் கூறப்பட்டது.
ஆனால் தற்போது வெளியான புகைப்படத்தின் மூலம் குஷ்பு அவர்கள் வாரிசு திரைப்படத்தில் நடித்து வருகிறார் என்பது கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டது. இது குறித்து நடிகை குஷ்பு அவர்கள் தனது titter பக்கத்தில் ட்விட் பதிவிட்டுள்ளார். அவர் வெளியிட்ட அந்த பதிவில் இந்த குடும்பத்தில் ஒரு அங்கமாக இருப்பதில் மிகவும் நான் மகிழ்ச்சி அடைகிறேன். மேலும் நான் எதைப்பற்றி எதையும் கூறுவதற்கு முன்பு தயாரிப்பாளர் மற்றும் பட குழுவினர் அதிகாரப்பூர்வ செய்திக்காக காத்திருந்தேன் என்று கூறியுள்ளார்.