ஒரு காலத்தில் ரசிகர்களின் கனவுக்கன்னியாக திகழ்ந்து வந்த நடிகை தான் குஷ்பூ இவர் அந்தக் காலத்தில் இவர் நடித்த திரைப்படங்களை பார்க்கவே ஒரு தனி ரசிகர் கூட்டம் இருக்கும் அந்த அளவிற்கு குஷ்பூ எந்த திரைப்படத்தில் நடித்தாலும் அந்த திரைப்படத்தில் தனது ரசிகர்களை கவரும் வகையில் மிகவும் கவர்ச்சியாக நடித்து இருப்பார்.
அந்த வகையில் பார்த்தால் இவர் நடித்த வருஷம்16,சின்னத்தம்பி,தர்மத்தின் தலைவன் போன்ற பல திரைப்படங்கள் இவருக்கு நல்ல வரவேற்பு தந்ததால் இவர் தொடர்ந்து பல திரைப்படங்களை கைப்பற்றி நடித்து வந்தார்.குறிப்பாகக் கூற வேண்டும் என்றால் இவர் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களாக விளங்கி வரும் பல முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்து மிகவும் உச்ச நட்சத்திரமாக விளங்கி வந்தார்.
பின்பு பல நடிகைகளைப் போலவே இவரும் இயக்குனர் சுந்தர் சி அவர்களை திருமணம் செய்து கொண்டார்.திருமணத்திற்கு பிறகு அவ்வளவாக சினிமாவில் தலை காட்டவில்லை என்றாலும் குஷ்பூ சின்னத்திரை சீரியல்களில் நடித்து மீண்டும் தனது ரசிகர்களுக்கு தலைகாட்டினார்.
ஆம் இவர் சன்டிவி தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வந்த ஒரு சில சீரியல்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து மீண்டும் தனது ரசிகர்களுக்கு தனது முகத்தைக் காட்டியது மட்டுமல்லாமல் சமீபகாலமாகவே இவரது புகைப்படங்கள் இணையத்தில் மிக வேகமாக வைரலாகி வருகிறது பார்ப்பதற்கு கொழுக்கு மொழுக்கென்று இருந்த குஷ்பூ தனது உடல் எடை முழுமையாக குறைத்து பார்ப்பதற்கு சின்னத்தம்பி திரைப்படத்தில் நடித்தது போலவே காட்சி அளிக்கிறார்.
அந்த வகையில் இவர் ஸ்லிம்மாக இருக்கும் புகைப்படங்களையும் இணையத்தில் வெளியிடுவதால் ரசிகர்கள் பலரும் இவரை மீண்டும் சினிமாவில் நடிக்க கூப்பிடுகிறார்கள் அதேபோல் தற்போதும் இவரது ஸ்லிம்மாக இருக்கும் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது ஆம் பார்ப்பதற்கு குஷ்பூ கிட்டத்தட்ட கல்லூரி பெண் போலவே காட்சி அளிக்கிறார் இதனை பார்த்த ரசிகர்கள் பலரும் உங்களுக்கு இன்னும் வயது ஆகவில்லை என்று தான் கூற வேண்டும் என கமெண்ட் பதிவு செய்து வருகிறார்கள்.