திடீரென 18 வயது நடிகை போல் மாறிய குஷ்பூ – புகைப்படத்தை பார்த்து குழம்பிப் போய்க் கிடக்கும் ரசிகர்கள்.!

kusboo-
kusboo-

90 காலகட்டங்களில் இருந்து இப்பொழுது வரையிலும் பல்வேறு மொழிகளில் நடித்து தனது திறமையை வெளிக்காட்டி வருபவர் நடிகை குஷ்பு குறிப்பாக இவர் தமிழ் சினிமா உலகில் உச்ச நட்சத்திரமாக இருக்கும் ரஜினி, விஜயகாந்த், சரத்குமார், சத்யராஜ் போன்ற நடிகர்களுடன் நடித்து தனது மார்க்கெட்டை அப்பொழுதே உயர்த்திக் கொண்டார்.

தொடர்ந்து சினிமா உலகில் வெற்றியை நோக்கி ஓடிக் கொண்டிருந்த இவர் திடீரென இயக்குநர் சுந்தர் சியை காதலித்து திருமணம் செய்து கொண்ட பிறகு குடும்ப விஷயத்தில் இறங்கினார். இருப்பினும் மீடியா இவரை விடாமல் துரத்தியதால் சின்னத்திரை சீரியல் மற்றும் வெள்ளி திரையில் அம்மா சித்தி போன்ற கதாபாத்திரங்களில் நடித்துவந்தார்.

இது ஒரு பக்கம் இருக்க மறுபக்கம் அரசியல் பிரவேசம் கண்டு பல காட்சிகள் மாறி தற்போது பிஜேபியில் வலம் வந்து கொண்டிருக்கிறார். எது எப்படியோ ரசிகர்கள் மத்தியில் ஒரு பேசுபொருளாக நடிகை குஷ்பு இருந்து வந்தார் இந்த நிலையில் தான் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவான அண்ணாத்த திரைப்படத்தில் நடிக்கும் வாய்ப்பை பெற அதற்காக தனது உடல் எடையை குறைத்தார்.

இந்த படம் முடிந்த பிறகும் கொஞ்சம் கொஞ்சமாக தற்போது வாய்ப்புகள் கிடைக்க உள்ளது அந்த வகையில் தனது உடல் எடையை குறைத்து வருவதாக கூறப்படுகிறது அப்படித்தான் தற்போது உடல் எடையை குறைத்து இவர் இருக்கும் புகைப்படம் ஒன்று வெளியாகி உள்ளது இதை ரசிகர்கள் பார்த்து கொண்டாடினாலும் ஆனால் இது எந்த அளவிற்கு உண்மை என்பது தெரியவில்லை.

ஏனென்றால் இவர் வெளியிடும் புகைப்படங்களில் உடல் எடையைக் குறைத்தது போல் காணப்பட்டாலும் நிகழ்ச்சிகளில் குஷ்புவை பார்த்தால் அப்படியே குண்டாக தான் தெரிகிறார் இதனால்  அவரது புகைப்படங்களை எடிட் செய்யப்பட்டு வெளிவருகிறதா என ரசிகர்கள் கேள்வி கேட்க ஆரம்பித்துள்ளனர் இதோ நீங்களே பாருங்கள் இந்த புகைப்படத்தை..

kusboo-
kusboo-