தமிழ் சினிமாவில் வெகுகாலமாக நம்பர் ஒன் நடிகராக வலம் வந்து கொண்டிருப்பவர் தான் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவருடைய திரைப்படங்கள் திரையில் வெளியானால் போதும் ரசிகர்களின் கொண்டாட்டத்திற்கு பஞ்சமே இருக்காது ஏனெனில் திருவிழா போல இவருடைய திரைப்பட வெளியீடை கொண்டாடி வருகிறார்கள்.
இவ்வாறு பிரபலமான நமது நடிகர் சமிபத்தில் முருகதாஸ் இயக்கத்தில் தர்பார் என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார் இத்திரைப்படம் சரியான வெற்றியை கொடுக்காத காரணத்தினால் ரஜினி அடுத்ததாக ஒரு மெகா ஹிட் திரைப்படத்தில் நடிக்க வேண்டும் என்று முடிவு செய்துள்ளார்.
இதனை தொடர்ந்து தற்போது சிறுத்தை சிவா இயக்கத்தில் அண்ணாத்த என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார் இத்திரைப்படத்தில் நடிகை நயன்தாரா அவருக்கு ஜோடியாக நடிப்பது மட்டுமின்றி கீர்த்தி சுரேஷ் மீனா குஷ்பு என பலரும் இத்திரைப்படத்தில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த்க்கு தங்கையாக நடித்து உள்ளார்கள்.
இந்நிலையில் நடிகை குஷ்பு ரஜினியுடன் அண்ணாமலை, மன்னன், பாண்டியன், தர்மத்தின் தலைவன் ,போன்ற திரைப்படங்களில் ஜோடி போட்டு கதாநாயகியாக நடித்துள்ளார் இந்நிலையில் குஷ்பு தன்னுடைய தோற்றம் குறித்து இப்படி ஒரு நிலையில் ரஜினியுடன் பல வருடம் கழித்து நடித்துள்ளேன்.
என்று வருத்தப்பட்டது மட்டுமல்லாமல் குறிப்பு ஆரம்பத்தில் மிகவும் ஒல்லியாக தான் இருந்துள்ளார் பின்னர் கொஞ்சம் கொஞ்சமாக தன்னுடைய உடல் எடையை கூட்டி உள்ளாராம். ஆனால் தற்போது தன்னுடைய வேலையை முற்றிலுமாக குறைத்துவிட்டு மிகவும் அழகாக தோற்றம் அளித்துள்ளார்.
இந்நிலையில் நான் ஒல்லியாக இருக்க வேண்டும் என்றுதான் நினைத்தேன் ஆனால் என்னால் இயலவில்லை தயவுசெய்து என்னை மன்னித்துக் கொள்ளுங்கள் என்று குஷ்பு கூறியிருந்த நிலையில் ரசிகர்கள் பலரும் நீங்கள் குண்டாக இருந்தால்தான் அழகாக இருக்கிறீர்கள் என்று அவருக்கு ஆறுதல் தெரிவித்து வருகிறார்கள்.