தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனராக வலம் வருபவர் தான் இயக்குனர் சிவா இவர் சமீபத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை வைத்து அண்ணாத்த என்ற திரைப்படத்தை இயக்கி வருகிறார் இவ்வாறு உருவாகும் இந்த திரைப்படம் ஆனது எப்பொழுது வெளியாகும் என ரசிகர்கள் ஆர்வத்துடன் இருந்து வருகிறார்கள்.
இந்நிலையில் இத்திரைப்படம் ஆனது வருகின்ற தீபாவளியை முன்னிட்டு வெளியாக உள்ளதாக செய்திகள் வெளியானது ரசிகர்களை பெரும் சந்தோஷத்தில் மூழ்க வைத்தது இந்நிலையில் இந்த திரைப்படத்தில் எஸ் பி பாலசுப்ரமணியம் பாடிய பாடல் ஒன்று சமீபத்தில் வெளியாகி உள்ளன.
இவ்வாறு அவருடைய பாடல் வெளியானதைத் தொடர்ந்து மற்றொரு பாடலும் வெளியாக உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன இவ்வாறு போற போக்கை பார்த்தால் அண்ணாத்த திரைப்படத்திற்கு ஆடியோ லான்ச் இருக்காது போல என ரசிகர்களுக்கு முகம் சுழிக்க ஆரம்பித்து விட்டார்கள்.
மேலும் இந்த திரைப்படத்தில் ரஜினிகாந்த் நயன்தாரா மட்டுமின்றி இதர கதாபாத்திரத்தில் முக்கிய நடிகைகளான குஷ்பு மீனா கீர்த்திசுரேஷ் போன்றவர்கள் நடித்துள்ளார்கள் ஆகையால் இவர்கள் எந்த வகையான கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்கள் என்ற விவரம் ரசிகர்களுக்கு தெரியாமல் இருந்து வந்தன.
இந்நிலையில் நடிகை குஷ்பு மீனா கீர்த்தி சுரேஷ் ஆகிய மூவரும் அண்ணாத்த படத்தில் ரஜினிக்கு சகோதரிகளாக நடித்து வருகிறார்களாம். மேலும் இவ்வாறு உருவாகும் இத் திரைப்படமானது ஃபேமிலி டிராமாவாக இருக்கும் என ரசிகர்கள் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.
ஆகையால் இத்திரைப்படம் வெளி வந்தால் தான் தெரியும் சிவாவின் இயக்கம் எப்படி இருக்கிறது என்றும் படம் எந்த அளவிற்கு ஹிட் கொடுக்கிறது என்றும் பார்க்க முடியும்.