15 கிலோ வரை உடல் எடையை குறைத்த குஷ்பூ.! ரகசியத்தை ரசிகர்களுக்கும் கூறி ட்விட் போட்ட பதிவு இதோ.!

kushboo

தமிழ் திரையுலகில் ஒரு காலத்தில் ரசிகர்களின் கனவுக்கன்னி என பெயரெடுத்து வந்த நடிகை தான் குஷ்பூ இவர் 80ன் காலத்து ரசிகர்களின் கனவுக்கன்னியாக திகழ்ந்து வந்தார் என்பது அனைவருக்கும் தெரிந்த விஷயம் தான் பல திரைப்படங்களில் பலவிதமான கதாபாத்திரங்களை ஏற்று பல முன்னணி நடிகர்களுடன் ஜோடி போட்டு நடித்து வந்த இவருக்கு தமிழ் சினிமாவில் நிரந்தரமான ஒரு இடம் கிடைத்துவிட்டது.

இவரது பெயரில் குஷ்பூ இட்லி போன்ற பல விஷயங்கள் நடைபெற்று வந்ததை நாம் பார்த்திருப்போம் அதேபோல் இவருக்கு ரசிகர்கள் கூட்டமும் அதிகம் என்பது நமக்கு தெரிந்த விஷயம் தான் மேலும் இவரது நடிப்பில் தற்போது ஒரு சில திரைப்படங்கள் உருவாகி வருகிறது.

திரைப்பட வாய்ப்புகள் இவருக்கு பல நடிகைகள் போல தொடர்ச்சியாக அமையாமல் இருந்ததால் இவர் சின்னத்திரை சீரியல்களிலும் அவ்வபோது கவனம் செலுத்தி வந்தார் அந்த வகையில் பார்த்தால் இவர் சன் டிவி தொலைக்காட்சியில் ஒரு சில சீரியல்களில் நடித்துள்ளார்.

மேலும் தனது திருமணவாழ்க்கையில் இயக்குனர் சுந்தர் சி யை திருமணம் செய்து கொண்டு தனது பிள்ளைகளுடன் தற்பொழுது ஜாலியாக வாழ்ந்து வரும்இவர் அடிக்கடி அரசியலிலும் ஈடுபடுவது உண்டு அந்த வகையில் பார்த்தால் இவர் அரசியலிலும் தற்போது மும்முரமாக இறங்கி விட்டார் மேலும் சமீபத்தில் இவரது புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி ரசிகர்களை அதிர்ச்சியாக்கிவிட்டது.

ஏனென்றால் குஷ்பூ மிகவும் பார்ப்பதற்கு இளமையாக கல்லூரி பெண் போல் காட்சி அளித்தது ரசிகர்களை கவர்ந்துவிட்டது பார்ப்பதற்கு ஆண்டி போல் இருந்த இவர் எப்படி மிகவும் ஸ்லிம்மாக மாறினார் என பல ரசிகர்களும் பலவிதமான கேள்விகளை எழுப்பி வந்ததை நாம் பார்த்திருப்போம் முதன்முறையாக 15 கிலோ உடல் எடையை குறைத்தது பற்றி தற்போது குஷ்பூ என்ன பகிர்ந்துள்ளார் என்பதை நீங்களே பாருங்கள்.