ஒரு காலத்தில் தமிழ் சினிமாவில் அனைத்து நடிகைகளும் வியந்து பார்க்கும் அளவிற்கு மார்க்கெட் உச்சத்தில் திகழ்ந்தவர் தான் குஷ்பூ இவர் தமிழ் சினிமாவில் 80ன் காலத்து ரசிகர்களின் கனவுக்கன்னியாக திகழ்ந்து வந்தார் அதிலும் குறிப்பாக இவரது திரைப்படங்கள் என்றால் இவரது ரசிகர்கள் உடனே பார்த்து விடுவார்கள் அந்த அளவிற்கு இவர் தனது ரசிகர்களுக்கு நல்ல நல்ல திரைப்படங்களை கொடுத்து வந்துள்ளார்.
குறிப்பாகக் கூற வேண்டும் என்றால் இவர் பல முன்னணி நடிகர்களுடன் ஜோடி போட்டு நடித்து நிறைய ரசிகர் வட்டத்தை உருவாக்கி வைத்திருக்கிறார் தற்போதும் இவர் நடித்தால் வசூல் ரீதியாக இவர் நடிக்கும் திரைப்படம் அதிகமாக வசூல் செய்து விடும் அந்த அளவிற்கு இவர் ரசிகர் வட்டத்தை உருவாக்கி வைத்திருக்கிறார்.
மேலும் இயக்குனர் சுந்தர் சி அவர்களை திருமணம் செய்து கொண்டு செட்டில் ஆன இவர் அடிக்கடி அரசியலிலும் தலைகாட்டி வந்தார் தற்போது மீண்டும் சினிமாவில் ரீ-என்ட்ரி கொடுக்கும் விதமாக ரஜினி நடிக்கும் அண்ணாத்த திரைப்படத்தில் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
இவர் தொடர்ச்சியாக பல திரைப்படங்களை கைப்பற்றுவதற்காக தனது உடல் எடை முழுமையாக குறைத்து எடுத்த புகைப்படங்களை சமீபத்தில் இவர் சமூக வலைதள பக்கங்களில் பகிர்ந்தார் என்பதை நாம் பார்த்திருப்போம் அதே போல் தற்போதும் இவர் தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு சில புகைப்படங்களை பகிர்ந்துள்ளார் ஆம் பார்ப்பதற்கு மிகவும் ஸ்லிம்மாக மாறி கல்லூரி படிக்கும் பெண் போல் காட்சி அளிக்கிறார்.
Sunshine ☀️ pic.twitter.com/NPWQhyuM92
— KhushbuSundar (@khushsundar) September 4, 2021
மேலும் இந்த புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் பலரும் எப்படி இவர் மிகவும் ஸ்லிம்மானார் அது எங்களுக்கு தெரிய வேண்டும் என இவரது புகைப்படங்களை இணையத்தில் ஷேர் செய்து வருகிறார்கள்.