விடாமுயற்சி விஸ்வரூப வெற்றி..! கடின உழைப்பால் மகளுக்கு தங்கை போல காட்சியளிக்கும் நடிகை குஷ்பூ..!

kushpu
kushpu

80ஸ் காலகட்டத்தில் முன்னணி நடிகையாகவும் ரசிகர்களின் கனவு கன்னியாக கொடிகட்டி பறந்தவர் நடிகை குஷ்பு. இவர் 1980ஆம் ஆண்டு தன்னுடைய திரையுலக பயணத்தை ஆரம்பித்தவர். அந்த வகையில் இவர் தமிழ் மொழி மட்டுமில்லாமல் தெலுங்கு கன்னடம் மலையாளம் போன்ற பல்வேறு மொழிகளிலும் தன்னுடைய நடிப்புத் திறனை வெளிக்காட்டி உள்ளார்.

இவ்வாறு ஏகத்திற்கு ரசிகர் கூட்டத்தை உருவாக்கிய நடிகை குஷ்பூ தமிழில் தலை சிறந்த நடிகையாக காட்சியளித்தார் இதன் மூலமாக அவருடைய ரசிகர்கள் அவருக்கு கோயில் கட்டி கும்பாபிசேகம் செய்தார்கள்.  இவ்வாறு பிரபலமான நமது நடிகை சின்னத்திரை வெள்ளித்திரை என அனைத்திலும் போட்டி போட்டு நடித்து வருகிறார்.

அந்த வகையில் இவர் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் ரஜினி கமல் விஜயகாந்த் சரத்குமார் விஜய் என பல்வேறு நடிகர்களின் திரை படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்தது மட்டுமல்லாமல் தற்போதைய பிரபல அரசியல் கட்சிகள் இணைந்து மக்களுக்கு தொண்டு செய்யவும் முன்வந்துள்ளார்.

இந்நிலையில் வெகு காலங்கள் கழித்து சூப்பர் ஸ்டாருடன் மறுபடியும் ஜோடி போட்டு நடிப்பதன் காரணமாக தன்னுடைய உடல் எடையை முற்றிலுமாக குறைத்து விட்டு பாலிவுட் நடிகை ரேஞ்சுக்கு காட்சியளித்து வருகிறார் அந்த வகையில் தற்போது தன்னுடைய புகைப்படங்களை டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

இவ்வாறு அவர் வெளியிட்ட புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் வாயில் ஈ போவது கூட தெரியாமல் ரசித்து வருகிறார்கள். இவ்வாறு இவர் வெளியிட்ட புகைப்படமானது சமூக வலைதள பக்கத்தில் மிகவும் வைரலாக பரவி வருகிறது.

kushpo-2
kushpo-2

அந்த வகையில் நடிகை குஷ்பு அண்ணாத்த திரைப்படத்திற்காக சுமார் 15 கிலோ வரை தன்னுடைய உடல் எடையை குறைப்பது மிகவும் ஒரு ஆச்சரியமான செயல்தான். ஆனால் குஷ்பு கொலுக்கு முழுக்கு என இருந்தால் தான் அழகு என பலரும் கூறிய நிலையில் அவர்களின் வாயை அடைக்கும் அளவிற்கு தன்னுடைய மகள்களுக்கு தங்கை போல காட்சியளிக்கிறார்.

kushpo-1
kushpo-1