அரசியலை விட்டு விலகிய ரஜினி.! அதிரடியாக கருத்து தெரிவித்த குஷ்பூ.!

நடிகை குஷ்பபூ சினிமாவில் நடிப்பது மட்டுமல்லாமல் அரசியலில் அதிகமாக ஈடுபட்டு வருபவர் இவர் சமீபத்தில் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி பாஜக கட்சியில் இணைந்து பல விஷயங்களை மக்களுக்கு கூறினார்.

மேலும் ரஜினியின் அரசியல் வருகை குறித்து எதிர்பார்த்த ரசிகர்களில் இவரும் ஒருவர் தான் ரஜினி எப்போது அரசியலில் ஈடுபடுவார் என ஆர்வத்துடன் குஷ்பூவும் பார்த்து வந்தார் சமீபத்தில் ரஜினி உடல்நிலை சரியில்லாத காரணத்தினால் அவர் கட்சி தொடங்க வில்லை எனவும் என்னை மன்னியுங்கள் எனவும் ட்விட்டரில் பதிவிட்டிருந்தார்.

இதனையடுத்து ரஜினி அரசியலில் ஈடுபடுவதில்லை என தெரிந்த பிரபலங்கள் பலரும் தங்களது கருத்துக்களை இணையதளத்தில் தெரிவித்திருந்தார்கள்.அந்த வகையில் குஷ்புவும் தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு தகவலை பகிர்ந்துள்ளார்.

அந்த தகவல் என்னவென்றால் சார் உங்கள் முடிவு ஒவ்வொரு தமிழர்களின் இதயத்தையும் உடைக்கிறது ஆனால் உங்கள் உடல் நலம் மற்றும் நல்வாழ்வை தவிர எதுவும் எனக்கு உண்மையில் பெரிதாக தெரியவில்லை.

உங்களுடைய நலம் விரும்பியாக ஒரு தோழியாக உங்களுடைய முடிவுக்கு நான் ஆதரவு தெரிவிக்கிறேன்

நீங்கள் விலைமதிப்பெற்ற  எனக்கு மிகவும் முக்கியமான நபர் கவனமாக இருங்கள் மற்றும் மகிழ்ச்சியாக இருங்கள் என ட்விட்டரில்  பதிவிட்டுள்ளார்.