ஒரு நேரத்தில் தன்னுடைய சிறந்த நடிப்பு மற்றும் அழகின் மூலமாக முன்னணி நடிகையாக வலம் வந்தவர் தான் நடிகை குஷ்பு இவ்வாறு பிரபலமான நமது நடிகை தன்னுடைய சிறந்த நடிப்பின் மூலமாக ஏகப்பட்ட ரசிகர்களை கவர்ந்து விட்டார் அந்த வகையில் இவருடைய ரசிகர்கள் இவருக்கென கோயில் கூட கட்டி கும்பாபிஷேகம் செய்துள்ளார்கள்.
அந்தவகையில் நடிகை குஷ்பூ நடிக்கும் திரைப்படங்களுக்கான எதிர்பார்ப்பு ரசிகர் மத்தியில் மிகவும் அதிகமாக இருந்து வந்தன. மேலும் ஒரு கதாநாயகி என்றால் மிகவும் ஒல்லியாக இருக்கவேண்டும் என்பதுதான் ரசிகர்கள் பலரும் எதிர்பார்ப்பார்கள் ஆனால் உடல் எடை அதிகமாக இருந்தாலும் ரசிகர்களை தன்னை ரசிக்க வைத்த ஒரு நடிகை என்றால் அது குஷ்பூ தான்.
அந்த வகையில் குஷ்பு குண்டாக இருப்பதும் கொழுக்கு மொழுக்கு என இருப்பதும் ரசிகர்களுக்கு மிகவும் பிடித்து போய்விட்டது இதனால் குஷ்பு ஒருபோதும் தன்னுடைய உடல் எடையை பற்றி கவலைப் பட்டதே கிடையாது ஆனால் வயது முதிர்ந்ததும் கதாநாயகிகளை சினிமா ஒதுக்குவது வழக்கம்தான்.
அந்தவகையில் திரைப் படங்களில் நடிக்காவிட்டாலும் சின்னத்திரை மற்றும் ஒரு சில திரைப்படங்களில் முக்கிய கதாபாத்திரம் போன்ற பல்வேறு வகையில் தன்னுடைய முகத்தை திரைஉலகில் காட்டி வந்தார். இந்நிலையில் நடிகை குஷ்பு தற்போது திரைப்படங்களில் நடிப்பதை விட தயாரிப்பில் தான் அதிக கவனம் செலுத்தி வருகிறாராம்.
அந்த வகையில் தன்னுடைய கணவர் சுந்தர் சி இயக்கும் ஒவ்வொரு திரைப்படங்களையும் குஷ்புதான் தயாரித்து வருவதாக செய்திகள் வெளியாகியுள்ளன. அதுமட்டுமில்லாமல் தற்போது தன்னுடைய உடல் எடையையும் நடிகை குஷ்பு முற்றிலுமாக குறைத்து விட்டு சமூக வலைதளப் பக்கத்தில் புகைப்படங்கள் வெளியிட்டுள்ளார்.
இவ்வாறு வெளிவந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் மறுபடியும் சின்னத்தம்பி நந்தினியை பார்த்தது போலவே இருக்கிறது என அவரைப் பாராட்டி வருகிறார்கள்.