சினிமாவுலகம் காலத்திற்கு ஏற்றவாறு புதுப்புது தொழில்நுட்பங்களை பயன்படுத்தி சிறப்பான படங்களை மக்களுக்கு கொடுத்து மகிழ்வித்து வருகிறது அந்த வகையில் தமிழ் சினிமா அசுர வளர்ச்சியை எட்டியுள்ளது இருப்பினும் ஒரு சில மொழிகளில் இன்னும் அந்த வளர்ச்சி இல்லை என ஒரு குற்றச் சாட்டுகள் இருந்து வந்துள்ளன.
அந்த வகையில் கன்னட சினிமா வளர்ச்சியில் குறைந்த இடத்தை எப்படித் தெரிந்தது. இந்த நிலையில் இயக்குனர் பிரஷாந்த் நீல் கேஜிஎஃப் என்ற ஒரு மாபெரும் படத்தை சிறந்த தொழில்நுட்பத்தை பயன்படுத்தி கொடுத்திருந்தார் படத்தின் கதையும் சிறப்பாக இருந்ததால் இந்த படம் இந்திய அளவில் பேசப்பட்டது.
அதுமட்டுமல்லாமல் கன்னட சினிமாவை உச்சிக்கு தூக்கி சென்று நிப்பாடியது. கேஜிஎப் திரைப்படம் மிகப்பெரிய அளவில் வசூல் வேட்டை நடத்தியதை தொடர்ந்து அதன் இரண்டாம் பாகம் எடுக்கப்பட்டது ஆனால் படம் மட்டும் வெளியாகாமல் தள்ளிக்கொண்டே போனது.
இருப்பினும் படக்குழு ஒருவழியாக இறுதியாக படத்தின் தேதியை லாக் செய்து விட்டது. இந்த படம் அடுத்த வருட ஏப்ரல் 4ஆம் தேதி திரையரங்கில் வெளியாகி ரெடியாக இருக்கிறது. அதே தேதியில் ஹிந்தியில் சல்மான்கான், ஷாருக்கான் ஆகியோர்கள் நடித்துள்ள லால் சிங் சத்தா என்ற திரைப்படம் திரையரங்குகளில் வெளியாக உள்ளது.
இந்த திரைப்படமும் ஏப்ரல் 4ஆம் தேதி வெளியாக உள்ளதால் இந்த இரண்டு படங்களும் நேருக்கு நேர் மோத உள்ளது கன்ஃபார்ம் ஆகி உள்ளது. ஏப்ரல் மாதத்திலேயே தமிழ் படங்கள் பல வெளியாக இருப்பதால் நிச்சயம் கேஜிஎஃப் படத்திற்கு மிகப்பெரிய ஒரு சறுக்கலை ஏற்படுத்தும் என ஒரு தரப்பு ரசிகர்கள் கூறி வருகின்றனர்.