படம் விறுவிறுப்புக்கு பஞ்சம் இல்லாமல் இருந்தால் போதும் ரசிகர்கள் எந்த மொழி படமாக இருந்தாலும் பார்த்து கொண்டாடுவதை வழக்கமாக வைத்திருப்பார்கள். அந்த வகையில் இயக்குனர் பிரஷாந்த் நீல் கேஜிஎஃப் படத்தின் பிரம்மாண்ட வெற்றியைத் தொடர்ந்து அதன் இரண்டாவது பாகத்தை விருவிருப்பாக இயக்கினார்.
ஒருவழியாக அந்த படமும் ஏப்ரல் 14 ஆம் தேதி கோலாகலமாக வெளியாகியது முதல் பாகத்தை விட இந்த பாகத்தில் விறுவிறுப்பும் பஞ்சமில்லாமல் மாஸ் சீன்கள், செண்டிமென்ட், ஆக்ஷன் என அனைத்தும் கலந்து இருந்ததால் படம் ரசிகர்களையும் தாண்டி பொது மக்களையும் கவர்ந்து இழுத்தது இந்த படம் ஆரம்பத்தில் இருந்து கடைசி வரைக்கும் சீட்டின் நுனியில் உட்கார வைக்கும்.
அந்த அளவிற்கு ஒவ்வொரு சீனையும் நாம் எதிர்பார்ப்பதைவிட வித்தியாசமாகவும் ஆச்சர்யப்படுத்தும் வகையில் இருந்ததால் இந்த படம் மற்ற படங்களை பீட் செய்து ஓடிக்கொண்டிருக்கிறது முதல் வாரத்தை விட இரண்டாவது வாரத்தில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது குறிப்பாக வசூல் வேட்டை ஜோராக நடித்து வருகிறது கே ஜி எஃப் 2.
இந்தப் படம் இதுவரை 900 கோடிக்கு மேல் வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது இப்படியே போய்க்கொண்டிருந்தால் வெகுவிரைவிலேயே ஆயிரம் கோடியை தொட்டு புதிய சாதனை படைக்கும் என தெரியவருகிறது இப்படி இருக்கின்ற நிலையில் தமிழகத்தில் மட்டும் கேஜிஎப் திரைப்படம் எவ்வளவு வசூல் செய்துள்ளது என்பது குறித்து தகவல்கள் வெளிவருகின்றன.
அதன்படி பார்க்கையில் யஷ் நடிப்பில் உருவான கேஜிஎப் திரைப்படம் தமிழகத்தில் மட்டும் இதுவரை சுமார் 70 கோடி அள்ளி உள்ளதாக தகவல்கள் வெளிவருகின்றன. பிறமொழி படங்கள் தமிழகத்தில் நல்ல வரவேற்பை பெற்றாலும் வசூல் வேட்டை நடத்துவது அரிது. ஆனால் கேஜிஎப் அசால்டாக 70 கோடியை அள்ளி இருக்கிறது இது மிகப்பெரிய ஒரு வசூல் எனவே கூறப்படுகிறது.