கொரோனா மூன்றாவது அலைக்கு பிறகு பல்வேறு திரைப்படங்கள் திரையரங்கில் வெளியாகின்றன இதனால் திரையரங்க உரிமையாளர்களும், விநியோகஸ்தர்களும் ஒருபக்கம் கொண்டாடினாலும் மறுபக்கம் ரசிகர்கள் திருவிழா போல அலப்பறை செய்கின்றனர். ஏனென்றால் நீண்ட இடைவெளிக்குப் பிறகு டாப் நடிகர்கள் படங்கள் வெளிவருவதால் சந்தோஷத்தை கொடுத்துள்ளது.
அந்த வகையில் அஜித்தின் வலிமை படத்தை தொடர்ந்து சூர்யாவின் எதற்கும் துணிந்தவன் படமும் வெளியாகி கொண்டாடப்பட்டது அதனை தொடர்ந்து வருகின்ற ஏப்ரல் 13, 14 ஆகிய தேதிகளில் அடுத்தடுத்த டாப் நடிகர்கள் படங்கள் வெளிவருகின்றன அந்த வகையில் விஜயின் பீஸ்ட்,யாஷின் KGF 2 என அடுத்தடுத்து வெளிவருகின்றன. கன்னட நடிகர் யாஷ் நடிப்பில் உருவான கேஜிஎப் திரைப்படம்.
ஏற்கனவே சூப்பர் ஹிட் அடித்த நிலையில் அதன் இரண்டாவது பாகத்தையும் வேற ஒரு லெவலில் பிரசாந்த் நீல் எடுத்து உள்ளார் பல்வேறு தடைகளைத் தாண்டி ஒருவழியாக ஏப்ரல் 14 ஆம் தேதி வெளியாக இருக்கிறது அதனை முன்னிட்டு பல்வேறு அப்டேட்களை கொடுக்க ரெடியாக இருக்கிறது அந்த வகையில் தற்போது கே ஜி எஃப் 2.
படத்தில் இருந்து இரண்டாவது சிங்கிள் பாடலான TOOFAN பாடல் இன்று வெளியாகி உள்ளது இந்த பாடல் எதிர்பார்க்காத அளவிற்கு அமோக வரவேற்பை மக்கள் மத்தியில் பெற்றுள்ளது இந்த பாடல் வெறும் இரண்டு மணி நேரத்தில் மட்டுமே சுமார் 6 மில்லியன் பார்வையாளர்களை பெற்று உள்ளதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
இந்த நிலையில் நடிகர் விஜய்யின் பீஸ்ட் படத்தில் இருந்து வெளிவந்த இரண்டு பாடல்கள் பல்வேறு சாதனைகளை செய்து வருகிறது அந்த சாதனைகளை எல்லாத்தையும் கேஜிஎப் 2 படத்திலிருந்து வெளிவந்த TOOFAN ஈசியாக முறியடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.