ஒரு கன்னட நடிகர் தமிழ் ரசிகர்களை அதிகம் கவர்ந்தார் என்றால் அது யாஷ் மட்டும் தான் இவர் கேஜிஎஃப் என்ற திரைப்படத்தில் நடித்து தமிழ் ரசிகர்களை அதிகமாக கவர்ந்து விட்டார் இயக்குனர் பிரசாந்த் நீல் இயக்கத்தில் கடந்த 2018 ஆம் ஆண்டு மிக பிரம்மாண்டமாக வெளியாகி மிகப்பெரிய சாதனை படைத்த திரைப்படம் தான் கேஜிஎஃப் எந்த ஒரு எதிர்பார்ப்பும் இன்றி வெளியான இந்த திரைப்படம் மக்களிடையே நல்ல வரவேற்பு பெற்று விமர்சன ரீதியாக நல்ல விமர்சனத்தையும் பெற்றுவிட்டது.
இந்த திரைப்படத்தில் யாஷின் நடிப்பு ரசிகர்களால் மிகவும் பாராட்டப்பட்டது அதிலும் குறிப்பாக இந்த திரைப்படத்தின் இரண்டாம் பாகம் ரசிகர்களுக்கு மிகவும் பிடிக்கும் என்ற எண்ணத்தில் இந்தப் படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்குனர் பிரசாந்த் நீல் அவர்கள் இந்த திரைப்படத்தின் இரண்டாம் பாகத்தையும் எடுத்து உள்ளார் மேலும் இந்த இரண்டாம் பாகத்தின் டீசரும் ஒரு சில மாதங்களுக்கு முன்பு வெளியாகி சமூக வலைதளங்களில் அதிக பார்வையாளர்களை பார்க்க வைத்து சாதனை படைத்தது.
ஆனால் இந்த திரைப்படத்தின் ரிலீஸ் தேதியை மட்டும் அதிகாரபூர்வமாக அறிவிக்காமல் ரிலீஸ் தேதி தள்ளி கொண்டே போனது ஆனால் தற்பொழுது இந்த திரைப்படத்தின் ரிலீஸ் தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது ஆம் கேஜிஎஃப் இரண்டாம் பாகத்தின் ரிலீஸ் தேதி அடுத்த வருடம் ஏப்ரல் 14ஆம் தேதி வெளியாக உள்ளதாக அதிகாரப்பூர்வமாக தகவல் வைரலாகி வருகிறது இதனை பார்த்த ரசிகர்கள் பலரும் உற்சாகத்தில் இருக்கிறார்கள்.
இதனைத்தொடர்ந்து அந்த தேதியிலேயே சலார் திரைப்படமும் வெளியாக உள்ளதாக கூறப்படுகிறது ஆனால் இந்த இரண்டு திரைப்படங்களும் ஒன்றாக மோதிக் கொண்டால் எந்த திரைப்படம் வசூல் ரீதியாக அதிகம் வசூல் செய்யும் என்பது தெரியவில்லை.
இதனைத் தொடர்ந்து இந்த தகவலை அறிந்த ரசிகர்கள் பலரும் இந்த போஸ்டரை சமூக வலைதள பக்கங்களில் வைரலாக்கி வருகிறார்கள் ஒரு சில ரசிகர்கள் இரண்டாம் பாகம் மிகவும் மிரட்டலாக இருக்கும் என்பது மட்டும் தெரிகிறது என கூறி வருகிறார்கள்.