KGF 2 திரைப்படம் உலகம் முழுவதும் 12 நாளில் அள்ளிய மொத்த வசூல் எவ்வளவு தெரியுமா.? வாங்க பார்க்கலாம்.

KGF
KGF

திறமை இருக்கும் நடிகர்கள் பலரும்  ஒரு கட்டத்தில் பெரிய அளவில் பேச படுவார்கள் அந்த வகையில் அதலபாதாளத்தில் கடந்த கன்னட சினிமாவில் தொடர்ந்து சிறப்பான படங்களில் நடித்து வலம் வந்தவர் நடிகர் யஷ்.  படங்களில் நன்றாக நடித்தாலும் கன்னட சினிமாவை தாண்டி பெரிய அளவில் இவரால் பிரபலம் அடைய முடியவில்லை..

இந்த நிலையில் தான்  இயக்குனர் பிரசாந்த் நீல் யாரும் எதிர்பார்க்காத அளவிற்கு ஒரு பிரம்மாண்ட கதையை உருவாக்கி அந்த கதையை நடிகர் யாஷ் -க்கு அசத்தினார் அந்தப் படம் தான் கேஜிஎப். முதல் பாகம் ஆக்சன், சென்டிமெண்ட் கலந்த  படமாக இருந்ததால் ரசிகர்களையும் தாண்டி மக்களையும் வெகுவாக கவர்ந்து இழுத்தது.

கன்னட சினிமாவையும் தாண்டி இந்திய அளவில் இந்த படம் பிரபலம் அடைந்து  அதுமட்டுமல்லாமல் மிகப்பெரிய ஒரு வசூல் வேட்டை நடத்தியது அதனைத் தொடர்ந்து இதன் இரண்டாம் பாகம் எடுக்கப்பட்டது ஆனால் பல்வேறு தடைகளை தொடர்ந்து சந்தித்ததால் படம் இரண்டு வருடம் கழித்து ஒரு வழியாக ஏப்ரல் 14ஆம் தேதி உலக அளவில் படம் வெளியானது.

முதல் பாகத்தை விட இரண்டாவது பாகத்தில் மாஸ் சீன்களுக்கு பஞ்சமில்லாமல் அதேசமயம் சென்டிமென்ட் கலந்த திரைப்படமாக உருவாகி இருந்ததால் படம் மக்கள் மத்தியில் வெற்றியை பெற்று தற்போது ஓடிக்கொண்டிருக்கிறது நாளுக்கு நாள் கேஜிஎப் 2 திரைப் படத்திற்கான வரவேற்பு அதிகரித்துக்கொண்டே இருக்கிறது இதனால் எதிர்பார்க்காத ஒரு வசூல் வேட்டையை நடத்தி வருகிறது.

படம் வெளியாகிய 12 நாட்கள் ஆன நிலையில் இதுவரை எவ்வளவு வசூல் வேட்டை நடத்தி உள்ளது என்பது குறித்து தகவல் வெளியாகி உள்ளது அதோடு மட்டுமல்லாமல் நேற்று கே ஜி எஃப் 2 திரைப்படம் எவ்வளவு வசூல் எது குறித்தும் தகவல் வெளியாகி உள்ளது. 12 நாட்கள் முடிவில் கே ஜி எஃப் 2 திரைப்படம் 930. 55 கோடி வசூல் செய்ததாக கூறப்படுகிறது நேற்றைய நிலவரப்படி உலகம் முழுவதும் சுமார் 30 கோடி வசூல் செய்ததாக தகவல்கள் உலா வருகின்றன.