இயக்குனர் பிரசாந்த் நீல் நடிகர் யாஷை வைத்து 2018 ஆம் ஆண்டு கே ஜி எஃப் என்ற படத்தை கன்னட மொழில் எடுத்திருந்தார் இந்த திரைப்படம் வெளிவந்து சூப்பர் டூப்பர் ஹிட்டடித்தது .
அதன்பிறகு பல மொழிகளிலும் டப் செய்து வெளியானது அதிலும் நல்ல வரவேற்ப்பை கண்டதால் இயக்குனரும் நடிகரும் வேற லெவல் உச்சத்தை எட்டினார். படக்குழுவும் நல்ல காசை பார்த்ததை தொடர்ந்து இரண்டாம் பாகத்தை எடுக்க வேண்டும் என அப்போதே படகுழு முடிவு பண்ணியது.
இதற்கான ஒரு சிறப்பான கதையை உடனடியாக பிரசாந்த் நீல் ரெடி செய்து படத்தை எடுத்துள்ளார் KGF இரண்டாம் பாகம் இறுதி கட்டத்தை எட்டியது. பல மாதங்களாகியும் படம் வெளிவராத சூழல் நிலையில் உள்ளதால் படக்குழு தட்டுத் தடுமாறி வருகிறது.
இந்த படத்தில் யாஷ் உடன் இணைந்து ஸ்ரீநிதி ரெட்டி, சஞ்சய் தத், பிரகாஷ்ராஜ், ரவீனா டாண்டன் போன்ற மிக முக்கிய பிரபலங்கள் நடித்துள்ளது. இந்த படத்திற்கு கூடுதல் பலமாக அமைந்துள்ளது. மேலும் இந்த படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி பட்டையை கிளப்பிய நிலையில் படக்குழு ஒரு புதிய செய்தியை வெளியிட்டுள்ளது.
அதாவது கே ஜி எஃப் 2 படத்தில் உள்ள ஆறு பாடல்கள் கொண்டது இதன் தென்னிந்திய ஆடியோ உரிமைத்தை லஹரி மியூசிக் நிறுவனம் 7 கோடியே 20 லட்சத்திற்கு வாங்கி உள்ளது இதை படக்குழு அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது.