சினிமா உலகில் ஒரு படம் மாபெரும் வெற்றிப் படமாக மாற்ற ஒரே ஒரு வழிதான் இருக்கிறது. படம் விறுவிறுப்புக்கு பஞ்சமில்லாமல் ரசிகர்களின் கண்களை திரையை விட்டு மற்ற பக்கம் செல்லாமல் படத்தை பார்க்க வைத்தாலே போதும் அந்த படம் ஆட்டோமேட்டிக்காக வெற்றியை ருசிக்கும்.
அந்த வகையில் இயக்குனர் பிரசாந்த் நீல் இயக்கத்தில் கன்னட நடிகர் யஷ் நடிப்பில் உருவாகி சூப்பர் ஹிட்டடித்த திரைப்படம் கேஜிஎப். அதன் இரண்டாவது பாகம் பல்வேறு தடைகளை தகர்த்தெறிந்து ஒருவழியாக ஏப்ரல் 13ஆம் தேதி படம் ரிலீஸ் ஆனது முதல் பாகத்தை விட இரண்டாம் பாகத்தில் மாஸ் சின்கள் மற்றும் சென்டிமென்ட், ஆக்ஷன் ஆகியவை அனைத்தும் கலந்து இருந்ததால் ரசிகர்களுக்கு மிகவும் பிடித்த திரைப்படமாக கே ஜி எஃப் 2 உருமாறியது.
படக்குழுவே எதிர்பார்க்காத அளவிற்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்று வசூலில் அடித்து நொறுக்கி வருகிறது இதுவரை கேஜிஎப் 2. 1000 கோடிக்கு மேல் வசூல் செய்துள்ளதாக தகவல்கள் வெளிவருகின்றன பாகுபலி-2 படத்தை தொடர்ந்து இந்த படம் ஆயிரம் கோடி வசூலித்து உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் பல்வேறு டாப் நடிகர்களின் வசூலிக்கும் முறை எடுத்து முன்னேறிக்கொண்டே இருக்கிறது இதனால் யாஷ் மற்றும் பிரசாந்த் நீல் சினிமா பயணம் அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. கன்னடம் சினிமாவையும் தாண்டி மற்ற இடங்களிலும் நல்ல வசூலை அள்ளி உள்ளது.
குறிப்பாக தமிழகத்தில் சென்னை ஏரியாவில் மட்டுமே இந்த திரைப்படம் மிகப் பிரமாண்ட ஒரு தொகையை வசூலித்துள்ளதாக கூறப்படுகிறது. கே ஜி எஃப் 2 படம் 3 வார முடிவில் சென்னையில் மட்டும் 9.46 கோடி வசூலித்துள்ளதாம் இந்த வார இறுதியில் மட்டும் 10 கோடியை எட்டிவிடும் என்கின்றனர்.