பீஸ்ட் படத்தை தும்சம் செய்யும் கேஜிஎப் 2.! பிரபல தயாரிப்பாளர் அதிரடி ட்வீட்.

beast kgf
beast kgf

தளபதி விஜய் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் அனிருத் இசையில் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் நடித்த திரைப்படம் தான் பீஸ்ட் இந்த திரைப்படம் கடந்த ஏப்ரல் 13ம் தேதி உலகம் முழுவதும் ரிலீஸ் ஆனது அதுமட்டுமில்லாமல் இந்த திரைப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம் கன்னடம்,ஹிந்தி என ஐந்து மொழிகளில் பான் இந்தியா திரைப்படமாக உருவானது. இந்த திரைப்படம் வெளியாகி ரசிகர்களிடம் கலவையான விமர்சனங்களைப் பெற்றது.

அதுமட்டுமில்லாமல் கதையில் லாஜிக்கே இல்லாமல் இயக்கி உள்ளார் என நெல்சன் மீது பலரும் குற்றச்சாட்டு வைத்தார்கள். மேலும் விஜய் ரசிகர்களும் நெல்சன் மீது கடும் கோபத்தில் இருக்கிறார்கள். இந்த நிலையில் பீஸ்ட் வெளியான அடுத்த நாளே பிரசாந்த் நீல்  இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் கேஜிஎப் இரண்டாவது பாகம் வெளியானது இந்த படம் ஏப்ரல் 14ஆம் தேதி தமிழ், தெலுங்கு, ஹிந்தி ,மலையாளம், கன்னடம் என ஐந்து மொழிகளிலும் வெளியிடப்பட்டது.

தமிழகத்தில் வெறும் 250 திரையரங்குகள் மட்டுமே கேஜிஎஃப் திரைப்படத்திற்கு கிடைத்தது ஆனால் போகப் போக திரையரங்குகள் அதிகரித்துக் கொண்டே செல்கின்றன அதுமட்டுமில்லாமல் ரசிகர்களிடம் நல்ல விமர்சனங்களையும் பெற்று வருகிறது. இந்த நிலையில் பல திரையரங்க உரிமையாளர்கள் கேஜிஎப் திரைப்படம் நல்ல லாபத்தைக் கொடுத்து உள்ளதாக கூறுகிறார்கள்.

இந்த நிலையில் கேஜிஎப் படத்தின் தமிழக விநியோகஸ்தரும் பிரபல தயாரிப்பாளருமான எஸ்ஆர் பிரபு தன்னுடைய சமூக வலைத்தளத்தில் kgf  படத்தின் வசூல் குறித்து ஒரு பதிவை வெளியிட்டு உள்ளார். அதாவது படம் வெளியாகி 10 நாட்களிலேயே 60 கோடி ரூபாய் வசூலை தாண்டி உள்ளதாக தெரிவித்துள்ளார்.

மேலும் கேஜிஎப் இரண்டாம் பாகத்தின் அமோக வெற்றி பீஸ்ட் திரைப்படத்தின் வசூல் பாதியாக குறைந்துள்ளது எனவும் தகவல் வெளியாகியுள்ளது.