சினிமா உலகில் நல்ல கதைகள் உள்ள திரைப்படம் எப்போது வெளியானதும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று நீண்ட நாட்கள் ஓடும். தமிழ்நாட்டில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். திரைப்படங்கள் இதனால் நல்ல வரவேற்பை பெறும்.
அந்த வகையில் அண்மையில் தளபதி விஜய் இளம் இயக்குனர் நெல்சன் உணர்வை கொடுத்து தனது 65 வது திரைப்படத்தில் நடித்தார் இந்த திரைப்படம் ஏப்ரல் 13 ம் தேதி உலக அளவில் வெளியானது. படம் ஆக்ஷன், காமெடி கலந்த படமாக இருந்ததால் ரசிகர்களை கவர்ந்து இழுத்தது.
இருப்பினும் நெல்சனனின் முந்தைய படங்களான டாக்டர், கோலமாவு கோகிலா ஆகிய படங்களைப் போல இந்தப் படம் இல்லை என்பதே ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனத்தை பெற்று தற்போது ஒடிக்கொண்டிருக்கிறது. இந்தத் திரைப்படத்தை தொடர்ந்து ஏப்ரல் 14 ஆம் தேதி கன்னட நடிகர் யாஷின் கேஜிஎப் இரண்டாவது பாகம் வெளியானது.
முதல் படம் பிரமாண்ட வெற்றியைப் பெற்றதால் இந்த படத்திற்கான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் உச்சத்தில் இருந்தது படம் ரசிகர்களை எதிர்பார்த்ததை விட பல மடங்கு ஆக்ஷன் காட்சிகள் , சென்டிமெண்ட் சீன்கள் சிறப்பாக இருந்ததால் தற்போது அதையும் தாண்டி மற்ற மொழிகளிலும் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. குறிப்பாக தமிழகத்தில் தளபதி விஜய்யின் பீஸ்ட் படத்தையே ஓவர்டேக் செய்து நல்ல வரவேற்ப்பை பெற்று கே ஜி எஃப் 2 வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது.
இதுவரை 400 கோடிக்கு மேல் வசூல் சாதனை செய்தது உள்ளது. இப்படி இருக்கின்ற நிலையில் சென்னை ஏரியாவில் மட்டும் நேற்று எவ்வளவு வசூல் செய்தது என்பது குறித்து தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி பார்வையில் பீஸ்ட் திரைப்படம் 32 லட்சம் வசூல் செய்ததாகவும் KGF 2 58 லட்சம் வசூல் செய்ததாகவும் தெரிகிறது. மொத்தமாக கேஜி எப் இதுவரை சென்னை ஏரியாவில் மட்டும் 4.19 கோடியை வசூல் செய்ததாகவும் பீஸ்ட் திரைப்படம் 8.35 கோடி வசூல் செய்ததாக தகவல்கள் வெளிவருகின்றன.