KGF டீசரை பார்த்து மிரண்டு போன ரசிகர்கள்.! 24 மணி நேரத்தில் படைத்த மிரட்டலான சாதனை.!

yaash
yaash

வெள்ளித்திரையில் 80 கோடி பட்ஜெட்டில் உருவாகி 250 கோடி வசூல் செய்த திரைப்படம்தான் கேஜிஎப் இந்த திரைப்படம் கடந்த 2018 ஆம் ஆண்டு திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களிடையே மிகப்பெரிய நல்ல வரவேற்பைப் பெற்றது.

இந்நிலையில் இந்த திரைப்படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்குனர் பிரசாந்த் நீல் இயக்கியுள்ளார் இந்த திரைப்படம் 100 கோடி பட்ஜெட்டில் உருவாகியுள்ளது.

சமீபத்தில் இந்த திரைப்படத்தின் கதாநாயகன் யாஷ் பிறந்தநாளை முன்னிட்டு படக்குழுவினர்கள் டீசரை சமூக வலைதளங்களில் வெளியிட்டார்கள்.அந்த டீசரை பற்றி தற்போது ஒரு தகவல் இணையதளத்தில் வெளியாகியுள்ளது.

அந்த தகவல் என்னவென்றால் இந்த டீசர் இருபத்திநான்கு மணி நேரத்தில் சுமார் 78 மில்லியன் பார்வையாளர்களை பார்க்க வைத்து சாதனை படைத்தது மட்டுமல்லாமல் 42 மில்லியன் லைக்குகளையும் இணையதளத்தில் குவித்துள்ளது.

மேலும் தற்பொழுது இந்த தகவல் இவரது ரசிகர்கள் மத்தியில் மிக வேகமாக வைரலாகி வருவது மட்டுமல்லாமல் இவரது ரசிகர்கள் பலரும் டீசர் மட்டுமே இவ்வளவு சூப்பராக இருக்குது நா படம் எவ்வளவுசூப்பராக இருக்குமோ என கூறி வருகிறார்கள்.