மிரட்ட வருகிறார் ராக்கி பாய் கே ஜி எஃப் இரண்டாம்பாகம் டீஸர் அதிகாரப்பூர்வ அறிவிப்பு.!

yash

விஜய் சேதுபதி மற்றும் தளபதி விஜய் நடிப்பில் தற்போது உருவாகியுள்ள திரைப்படம் தான் மாஸ்டர் இந்த திரைப்படத்தை இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் இந்த திரைப்படம் வரும் பொங்கலை முன்னிட்டு ஜனவரி 13-ஆம் தேதி 1000 திரையரங்குகளில் குறையாமல் வெளியாக உள்ளது என ஒரு சில நாட்கள் முன்பே அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளிவந்தது.

ஆனால் திரையரங்குகளில் 50 சதவீத இருக்கைகள் மட்டுமே அனுமதித்ததால் இளைய தளபதி விஜய் தமிழக முதல்வர் திரு எடப்பாடி பழனிச்சாமி அவர்களை சந்தித்து 100% இருக்கைகள் வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளார் என்பது பலருக்கும் தெரியும்.

இதனையடுத்து 100 சதவீத இருக்கைகள் அனுமதிக்கப்பட்டுள்ளதாக சமீபத்தில் தகவல் வெளியாகி வைரலாகி வந்தது.

மேலும் தளபதி விஜய்யின் மாஸ்டர் திரைப்படம் வெளியாக உள்ள நாளில் கன்னட நடிகர் யாஷ் நடித்த கே ஜி எஃப் 2 திரைப்படத்தின் டீசர் வெளியாக உள்ளது. ஏற்கனவே யாஷ் நடித்த கே ஜி எஃப்  முதலாம் பாகம் ரசிகர்களிடையே நல்ல விமர்சனத்தைப் பெற்றது மட்டுமல்லாமல் வசூல் ரீதியாக அதிகம் வசூலித்து சாதனை படைத்தது

இந்நிலையில் கே ஜி எஃப் 2 திரைப்படத்தின் டீசர் வெளியாக உள்ளதால் இருதரப்பு ரசிகர்களும் செம்ம உற்சாகத்தில் இருக்கிறார்கள் என்றுதான் கூறவேண்டும்.

இந்த தகவல் தற்போது இணையதளத்தில் வைரலாகி வருகிறது.

yash
yash