கன்னட சினிமாவில் மிக பிரம்மாண்டமான நடிகராக வலம் வந்து கொண்டிருப்பவர் தான் நடிகர் யாஷ். இவ்வாறு பிரபலமான நமது நடிகர் கேஜிஎப் என்ற திரைப்படத்தில் நடித்ததன் மூலமாக உலக சினிமாவையே திரும்பிப் பார்க்க வைத்தார். இவ்வாறு வெளிவந்த இந்த திரைப்படம் தெலுங்கு கன்னடம் மலையாளம் தமிழ் என பல்வேறு மொழிகளில் வெளியாகி மிகப்பெரிய சாதனையை படைத்தது.
அந்த வகையில் இந்த திரைப்படத்தின் கதை மிக சிறப்பு அம்சம் உடையதாக இருந்ததன் காரணமாக வசூலில் மிகப்பெரிய சாதனையை படைத்தது நம் அனைவருக்குமே தெரிந்த விஷயம் தான் அது மட்டுமில்லாமல் உலகம் முழுவதும் இந்த திரைப்படம் ஆனது ஆயிரம் கோடிக்கு மேலாக வசூல் செய்துள்ளது.
அதிலும் தமிழ்நாட்டில் மட்டுமே இந்த திரைப்படம் ஆனது மிக நல்ல வரவேற்ப்பை பெற்றது மட்டுமில்லாமல் இன்னும் சில தினங்களில் மட்டுமே 100 கோடியை எட்டிவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.பொதுவாக தமிழ் சினிமாவில் ரஜினி விஜய் அஜித் போன்ற நடிகர்களின் திரைப்படங்கள் தான் வசூலில் மாபெரும் சாதனை படைக்கும்.
அந்த வகையில் தற்போது நடிகர் யாஷ் நடித்த கேஜிஎஃப் திரைப்படமானது தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களுக்கு சவால் விடும் அளவிற்கு மிகப்பெரிய சாதனையை வசூலில் நடத்தியுள்ளது.அந்த வகையில் சமீபத்தில் கேஜிஎப் இரண்டாம் பாகத்தில் நடிப்பதற்காக யாஷ் 20 கோடி வரை சம்பளம் வாங்கியுள்ளதாக தெரியவந்துள்ளது.
மேலும் நடிகர் யாஷ் முழு சொத்து மதிப்பு விவரம் ஒன்று இணையத்தில் வெளியாகி ரசிகர்களை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது இவருடைய முழு சொத்து மதிப்பு சுமார் 53 கோடி வரை இருக்கும் என தோராயமாகக் கணிக்கப்பட்டுள்ளது.
ஆனால் இவருக்கு இவ்வளவு குறைவான சொத்து மதிப்பு இருப்பதற்கு முக்கிய காரணம் அவர் யாரேனும் உதவி கேட்டால் முதலில் உதவுவது மட்டுமில்லாமல் இல்லாதவர்களுக்கு தன்னிடம் இருப்பதை கொடுப்பது மட்டுமில்லாமல் மிக முக்கியமாக வரிகளை சரியான முறையில் கட்டி வருகிறாராம்.
இவ்வாறு நடந்து கொள்வதைப் பார்த்தால் பல நடிகர்களுக்கும் இவர் ஒரு முன்னுதாரணமாக இருக்கிறார் என நன்றாகவே தெரிகிறது.